பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஊருக்குள் ஒரு புரட்சி என்று கிண்டலாகப் பாடிக்கொண்டே, இங்கிலீஸ் கற்றுக் கொடுத் திருக்கிறான். அப்புறம் இவன் எங்கேயோ, அவள் எங்கேயோ படித்தார்கள். விடுமுறையில் வரும்போது லேசாகப் பேசிக் கொண்டார்கள். படிப்பு முடிந்து ஊருக்கு வந்த பிறகு, அதுவும் இந்த மாட்டு விவகாரம் வந்த பிறகு அவள் யாரோ இவன் யாரோ. மல்லிகாவின்மீது தப்பில்லை. தண்ணிர் குடத்தை தலையில் வைத்து நடக்கும்போது, அந்தக் குடம் நிஜமாகவே கீழே விழும் அளவிற்கு. அவனைப் பார்த்து. கண்களால் பருகியிருக்கிறாள். வயலுக்குப் போகும்போது, அவனைப் பார்த்துச் சிரித்திருக்கிறாள். அவன்தான், இந்த ஆண்டியப்பன், அவளைவிட மேலானவன் என்பதுபோல், அந்தப் பயலோடு சுற்றிச் சுற்றி, வந்தவளை உதாசீனம் செய்து, புனிதக் காதலின் பொருள் விளங்காமல் கிடக்கிறான். மாணிக்கம், அவளையே பார்த்துக் கொண்டு நடந்தான். இவளைப் பார்க்காமல் என்னால் எப்படி இருக்க முடிந்தது? எனக்காக... எனக்காகவே, தங்கம்மாவிடம் தகாத வார்த்தைகளை வாங்கிக் கொண்டவள். நான், அவள் சொந்தக்காரர்களுக்கு எதிராக எவ்வளவோ செய்தாலும் இதோ... இப்போதுகூட என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வருகிறாள். கல்லானாலும் காதலன்' என்பதுபோல, சாய்வாய் பார்க்கிறாள். இந்தக் கண்ணகியை-இந்த நளாயினியைஇந்தத் தமிழ்ப் பண்பின் கற்புக்கடம் பூண்ட நங்கையை, என்னால் எப்படித் தவிர்க்க முடிந்தது? எப்படி... எப்படி... மல்லிகாவிற்கு வழிவிட்டு மாணிக்கமும், மாணிக்கத்திற்கு வழிவிட்டு மல்லிகாவும், முதலில் ஒதுங்கி, பிறகு அவள் நிற்கிறாள் என்று இவன் நடந்தும், இவன் நிற்கிறான் என்று அவள் நடந்தும். அல்லோ கல்லப்பட்டு, இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். மாணிக்கம் பிராயச்சித்தம் செய்கிறவன்போல், அவளை வழி மறிப்பவன்போல் குறுக்கே நின்று கொண்டு. முதலில் பேசினான்: "என்னம்மா... என்னைப் பார்த்தால் ஒனக்கு ஒதுங்கனுமுன்னு தோணுதா..." மல்லிகா, அவனைக் குனிந்து பார்த்தாள். ஏனென்றால், அவனைவிட, அவள் இரண்டு அங்குலம் உயரம். நானத்துடனும், நாணயில்லாத கோபத்துடனும், "ஒதுங்குகிறவங்களைக் கண்டால், நானே ஒதுங்கிக்கிறது பெட்டர் இல்லையா?" என்றாள். "அடடே... ஒனக்கு இங்கிலீஷ் வருமா?" "ஒங்க... பிகாஸ் இங்கிலீவைடிவிட... என் இங்கிலீஷ் இஸ் பெட்டர்." "என் இங்கிலீவைடிப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?" "நீங்க... எனக்கு ஐந்தாவது வகுப்புல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்த இங்கிலீஷ் இன்னும் நலலா ஞாபகம் இருக்கு."