பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்தி ம் 63 "அதுமட்டும்தானா... தலையில குட்டுனதும், கன்னத்தைக் கிள்ளுனதும் மறந்து போச்சோ... இன்னும் ஒரு தடவை கன்னத்தைக் கிள்ளினால்தான் ஞாபகம் வருமுன்னு நினக்கேன்." "இந்த மாதிரிப் பேச்சை... என்கிட்ட வைக்காதீங்க..." மாணிக்கத்தின் முகம், பித்தளைபோல் வெளுத்தது. அவளைக் கோபமாகப் பார்த்துவிட்டு, மடமடவென்று நடக்கப்போனான். ஆனால், மல்லிகாவின் பேச்சு அவனை அங்கேயே நிற்க வைத்தது. "ஆண்டியை பெரிதாய் நினைத்து... ஒரு பொண்னோட மனசைப் புரிஞ்சிக்காதவரு, என்னோடு எதுக்காகப் பேசணும் ஒங்கள பெரிசாப் பேகனதாலேயே, ஒரு எச்சிக்கலை தங்கம்மா கிட்ட அவமானப்பட்டேன். அப்புறமும். அந்தத் தங்கம்மாவை பெரிசா நினைக்கிறவர்கிட்ட நான் எதுக்காகப் பேசணுமாம்? நான் ஒரு முட்டாள். என்னைப் பெரிசா நினைக்காதவரை... இன்னும் பெரிசாய் நினைக்கிறேன். எனக்கே புரியமாட்டக்கு." "மல்லி... நீ சொல்றதைப் பார்த்தால்... பார்த்தால்..." "வயலுக்குப் போறேன். வழியை விடுங்க." "முடியாது. மீறிப்போனால் தலையில் குட்டுவேன். அடடே-நல்லா சிரிக்கிறியே... எந்த பிரஷ் வச்சும்மா பல் தேய்க்கிற? சும்மா சிகரெட் அட்டை மாதிரி ஜொலிக்குதே..." "நான் எங்க வயலுக்குப் போறேன். நீங்க வேணுமுன்னால் உங்க வயலுக்கு வாங்களேன்... ரெண்டும் பக்கத்து பக்கத்து வயலுங்கதானே..." "இப்போ கொஞ்சம் வேலை இருக்கே..." "ஆண்டியப்பன் கூடத்தானே? வழியை விடுங்க... ஒங்க வாடையே வேண்டாம். உம். வழியை விடுங்க..." "மல்லி... மல்லி... நான் மடையன். முட்டாள். உன்னோட அன்பைப் புரிஞ்சுக்காத இடியட்... நானும் வாரேன்... நானும் வாரேன்..." மல்லிகா, அவனை நாணத்துடன் பார்த்தாள். அக்கம் பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று அவசர அவசரமாகப் பார்த்துக் கொண்டு, யாரும் இல்லையென்று தெரிந்த பிறகும், அவனிடம் ரகசியம் பேசுபவள்போல் பேசினாள். "இப்போ வேண்டாம். வயலில் அப்பா இருக்கார். அம்மான்னா கண்டுக்கமாட்டாள். நைட்ல எங்க மாமாவோட வீட்டுக்கு வாlங்களா..?" "எந்த மாமா...?" "எனக்கு ஒரே ஒரு தாய் மாமாதான். பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம்." "அப்படிச் சொல்லாதம்மா... பஞ்சாயத்தைக் கலைச் சாச்சு. அவரு இப்போ பழசு."