பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 67 பணம் கட்ட முடியாது என்கிறார்கள். மிஞ்சிக் கேட்டால், நீயும் வெட்னரி டாக்டரும் பங்கு போட்டது தெரியாதா... ஆயிரம் ரூபா மாட்டத்தான அநியாய விலைக்குத் தந்தியரு. நீரே கட்டும் என்கிறார்கள். "எத்தனையோ பேரு மாட்டுக்குத் தவம் இருக்கையில நான் ஒங்களுக்குத் தந்தனடா என்று தலைவர் தந்தனம் பாடினால், அதுக்காவ செத்த மாட்டுக்குப் பணம் கட்ட முடியுமா... என்ன பேச்சுப் பேசிறியரு செத்த பேச்சு" என்றார் ஒருவர். "சகுனி, துரியோதரன. கூட இருந்தே கெடுத்தது மாதிரி நீரும் மாட்ட தருமுன்னாலேயே மாட்டிக்கணுமுன்னு ஊசி போட்டு தந்ததுலதான் மாடு செத்துப் போச்சு. நானும் யோசிச்சேன். மெம்பரா ஆவு முன்னாலேயே மாட்டத் தாரீயரேன்னு யோசிச்சேன். கடைசில நீரு வம்பரா இருந்திருக்கியரு. மாட்டுப்பாலு முப்பது ருவாய்க்கு வித்திருக்கு... தீவனம் நாற்பது ரூபாய்க்கு போட்டிருக்கேன். மீதி பத்து ரூபாய கொடும்வே" என்று ஒருவர் கொடும் பேச்சைக்கூட பேசிவிட்டார். தேள் கொட்டிய திருடன்கூட, கொட்டிய இடத்தைப் பிடித்துக் கொண்டு, கசக்கலாம். ஆனால் எதையும் கசக்க முடியாமல், கசங்கிப்போன கூட்டுறவு சங்கத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் குழுமிய ஊர்ப் பிரமுகர்கள் கூட்டத்தில் முறையிட்டார். அங்கே, அந்த 'நாலு பேரும் இருந்தார்கள். 'மங்கள காரியம் நடைபெறப் போகும் போது, தடிமாடுத்தனமாய் பேசுறான் பார் என்று நினைத்தவர்கள் போல், பிரமுகர்கள் பேசாதிருந்தபோது, கூட்டுறவுப் புதல்வர் குத்திக் குத்திப் பேசினார். "நம்மளோட சேர்ந்தவங்க பிழைக்கட்டுமேன்னு செஞ்சது தப்பாப்போச்சு... மானேஜரு... பால் பவுடர விக்காரு... வாத்தியாருவ சம்பளத்துல பிடிக்காரு... வெளிலே தெரியல... கணக்கப்பிள்ளை நிலம் விக்கவன் கிட்டயும். வாங்குறவன் கிட்டயும் வாங்குறாரு... வெளில தெரியல. முன்னnப்பு... நிலவரில, தலைக்கு ஐம்பது பைசா போடுறாரு... அது வெளிலயும் தெரியல... ரசீதுலயும் வரல. ஆனால் நான் மட்டும் மாட்டிக்கிட்டேன். ஏன்? ஏன் தெரியுமா... நீங்க ஒத்தயா செய்யுறிய... பிறத்தியாருக்கு பங்கு கொடுக்காம பண்ணுறிய... ஆனால்... நான் இவங்க நாலு பேரு வீட்லயும் பசுமாடு சீதேவியாச்சே, இருக்கட்டுமுன்னு நினைச்சேன். கடைசில என்னை மூதேவியா ஆக்கிட்டாங்க. "... பால்குடுத்து பரோபகாரம் பண்ணுனவன் பல்லப் பிடிச்சிப் பாக்காங்க. பரவால்ல! நாளைக்கே ராஜினாமா பண்ணப்போறேன். ஆனால் அதுக்குள்ள நீங்கல்லாம் யார் யார் பெயருல மாடுகள வாங்கினியளோ அவங்ககிட்ட மருவாதியா மாடுகள கொடுத்துடனும். மாட்ட மட்டுமில்ல. டிராக்டரு. குதிரு. யந்திரக் கலப்பை எல்லாத்தையும் கொடுத்துடனும். இல்லன்னா நல்லா இல்ல. ஆமாம் நல்லா இல்ல. திருடும்போது சேர்ந்து திருடப்படாது என்கிறது சரியாப் போச்சு. என்ன