பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஊருக்குள் ஒரு புரட்சி "நியாயம் இப்போ... கூன்பட்டு கிடக்கு... அந்த கூனை நிமுத் துறதுக்கு, நாம வளைஞ்சிதான் ஆகணும். அப்படி வளையும் போது முதுகு வலிக்கும்... அதப் பார்க்கப் படாது... நாம நியாயத்த நிமுத்துற வேகத்துல... அந்த நியாயம் நிமுறலாம். அது நிமுறுற வேகத்துல நம்மளக்கூட தூர வீசி அடிக்கலாம். அதுக்குக் கவலப்படப்படாது. எங்கய்யா எனக்கு நான் சாவுறது வரைக்கும் தெய்வம். ஆனால்... மாட்டு விவகாரத்துல அவரு ஒரு குற்றவாளி... அவரு மாட்டைப் பிடிச்சதுக்கு நான் வேணுமுன்னாலும் சாட்சி சொல்றதுக்கு வரத்தயாரு... என்னோட அத்தான் எனக்கு புருஷனா வரப்படாதுன்னு தீர்மானம் பண்ணுன பாவிதான் நான். ஆனால்... அவரு நாணயத்துக்காவ போராடுனவர்னு ஜனங்க சொல்லணுமுன்னு நினைக்கேன். அவரவிட அவருவச்சிருக்கிற நியாயம் ஜெயிக்கணும். இல்லன்னா நான் உயிரோட இருக்கதுல நியாயமில்ல. வரட்டுமா? கையில ரெண்டு ரூபா இருக்கு, தரட்டுமா? நீரு கைத்தொட்டு வாங்காண்டாம். தரையில வச்சிடுதேன்... எடுத்துக்கிடும்." ஆண்டி, தங்கம்மாவை வியப்போடும். தவிப்போடும் பார்த்தான். அவளே, தன்னைச் சுற்றி ஒரு வேலியை, அவன் தாண்ட முடியாத அளவுக்குப் போட்டுக் கொண்டாள். அந்த முள்வேலி பட்டு ரத்தம் வரக்கூடாது என்பதற்காக, ஒதுங்கிக் கொள்ளும் வகையில், அவன், மண்வெட்டியை தரையில் வைத்தான். அதை. இப்போது ஏன் குத்திக் காட்டுகிறாள்? ஆவலோடு பார்த்தவன். அவளiன கண்கள் செத்துப்போனது போலவும், காதல் அதனுடன் உடன்கட்டை ஏறியது போலவும் தோன்றியதைப் புரிந்துகொண்டான். இவள்... பழைய தங்கம்மா இல்ல; அவள் செத்துட்டாள்... செத்துட்டாள். அவள் செத்ததுனால நானும் செத்துக்கிட்டே இருக்கேன். தன்னையே, தானே, சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகிறவன்போல், அவன் ஆவேசமாக நடந்தான். 1 O முத்துச்சாமி உயர்நிலை ஆரம்பப் பள்ளிக்கூடம்" என்று போர்ட் பெரிதாக இருந்தாலும், அந்தப் பள்ளிக்கூடத்தின் பெஞ்சுகள். கையிழந்து காலிழந்து கிடந்தாலும் பரவாயில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும், உறுப்புக் குறைவு இல்லாமலே, ஊனமாகக் கிடக்கிறார்கள். ஒரு வகுப்புக்கும், இன்னொரு வகுப்புக்கும் இடையே இருந்த ஒலைத் தட்டியில் கம்புகள் இருந்தனவே தவிர, காய்ந்து போன ஒரு தென்னந்தட்டி கூடக் கிடையாது. ஒன்றாவது வகுப்பில் படிக்கிற பயல்கள், பாடத்தைக் கவனிக்காமல், இரண்டாவது வகுப்பில் பிரம்பால் அடிபடும் பையன்களை ரசனை கலந்த அச்சத்தோடு பார்ப்பார்கள். ஐந்தாவது வகுப்பு ஆசிரியர் "முதல் பானிபட் போர் எப்போண்டா թջ