பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 71 தற்செயலாகத் தொடுபவள்போல், மீனாட்சி. லேசாகப் பிடித்தாள்... காத்தாயிக்கு. தெரியக்கூடாது என்பது மாதிரி... பொழுது புலர்ந்தது. ஆண்டியப்பனுக்கு ஒன்றும் ஒடவில்லை. இருபத்தைந்து பைசா கொடுத்து பால் வாங்க முடியாதவனால், நியாயத்தை எப்படி வாங்க முடியும்? நியாயத்தின் விலை அதிகமாயிற்றே... யோசித்தான்! அதோடு இன்னொரு யோசனையும் வந்தது... மாட்டைப் பிடிச்சது மாமா... அவரு மண்ணோடு மண்ணாயிட்டாரு... சட்டப்படி, அவர்தான் முதல் எதிரி. சட்டம் இல்லாதபடி, முதல் எதிரியான பரமசிவத்தின் பாதுகாப்பாக சட்டம் இருக்கலாம்... மாமவ அவமானப்படுத்துறது மாதுரி எதுக்காவ விவகாரத்த இழுக்கணும்? அதோட நம்மளால சமாளிக்க முடியாது... எல்லாப் பயலும் கையை விட்டுட்டான். கையை விட்டால் பரவா யில்லை... அந்தக் கைய இன்னொரு பெண்ணோட கழுத்துல விடுறான். குருவி தலயில பனங்காயை வச்சிட்டு. பனங்காட்டு நரி மாதுரி போயிட்டாங்க... நமக்கு வம்பு வேண்டாம்... மாமாவோட மாடும் செத்ததா நினைச்சிடலாம். மரம் வெட்டப் போவலாம். ஒழுங்கா தங்கச்சிக்கு சோறாவது போடலாம். மருமவப் பயலுக்கு பாலாவது கிடைக்கும். ஆண்டியப்பன், வீட்டைவிட்டு வெளியே வந்தான். இன்று இளைஞர் நற்பணி மன்ற உதவித் தலைவன் கோபாலைக் கூட்டிக்கொண்டு, நெல்லை போவதாக ஏற்பாடு. நெல்லையும் வேண்டாம் தொல்லையும் வேண்டாம். பட்டது போதும் சாமி. கோபாலைப் பார்த்து தன் புதிய முடிவைச் சொல்வதற்காகப் புறப்பட்ட ஆண்டியப்பன், தலையைத் தடவிக் கொண்டே நடந்தான். எதிரே தங்கம்மா வந்துகொண்டிருந்தாள். அழுக்கடைந்த புடவை. சிக்கல் விழுந்த தலைமுடி. எங்கேயோ பார்க்கும் கண்கள். தள்ளாடிக் கொண்டே நடந்த அவளைப் பார்க்க, ஆண்டிக்கே பரிதாபமாக இருந்தது. "என்ன தங்கம் இப்படி ஆயிட்ட..." "எங்க இப்படி..." "இன்னைக்கி திருநெல்வேலிக்குப் போகணும். யோசிச்சுப் பார்த்தேன். மாமனே செத்துட்டாரு... அவரு பிடிச்ச மாடா பெரிசு... அதோட என்னால தனியா நிக்க முடியாது. நீ எப்போ என்கிட்ட பேசுறத நிறுத்திட்டியோ அப்பவே மனசுக்குள்ள பேசிக்கிட்டிருந்த நியாயமும்... படிப்படியா பேசுறத நிறுத்திட்டு, கோபாலப் பார்த்து விவகாரத்தை விட்டுடலாமுன்னு சொல்லப் போறேன். வரட்டுமா? வந்து மரம் வெட்டப் போகணும்." தங்கம்மா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். கலங்கிய கண்களில், ஒருவித ஒளி: இருட்டின வீட்டில் வைத்த மெழுகுவத்திபோல் - தன்னையே எரித்து ஒளிமயமாக்குவதுபோல் கண்கள் செம்மைப்பட்டன. வாய் தானாகப் பேசியது.