பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஊருக்குள் ஒரு புரட்சி உயிர்போகும். இந்த இரண்டில் ஒன்று வந்தாலும் சரி... இன்னொன்று போனாலும் சரி... லாபந்தான். ஏதோ ஒருவித சத்திய ஆவேசத்துடன். அவன் காசில்லாத தகர டப்பாவை கால்களால் தள்ளி, ஒரு பானையை உடைத்து, பாளை அரிவாளை எடுக்கப் போன போது, சின்னானின் அக்கா காத்தாயி வந்தாள். கடந்த ஒரு மாதமாக, அவர்களின் கண்களில் அகப்படாதவள் தயங்கித் தயங்கி வந்து, குழந்தையை வாங்கிக் கொண்டாள். மீனாட்சி. காத்தாயியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, அதை நனைத்தாள். பழியை சுமந்துகொண்டு. அந்தப் பழியை மனிதாபி மானத்திற்காக உதறிக் கொண்டு வந்து நின்ற காத்தாயியை, கண்கலங்கப் பார்த்தான் ஆண்டி. இவள் யாரோ... நான் யாரோ... இவள் ஜாதி வேற... என் ஜாதி வேற... சி ஜாதி... மண்ணாங்கட்டி ஜாதி... தெருப் புழுதி ஜாதி... ஜாதியத் தூக்கி எருக்குழில போட... அதுக்கு, கொள்ளி வச்சு... குடமுடைக்க... ஆண்டியப்பன், என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு "அக்கா... என்கூடப் பொறக்காத பொறப்பே. ஒரு மாசமா... எங்களைப் பார்க்காமல்'எப்டிக்கா இருந்த? எப்டிக்கா மனசு வந்துது? எக்கா... எக்கா" என்று சொல்லிவிட்டு, அழுவது ஆண் பிள்ளைக்கு அழகில்லை என்று நினைத்தவன்போல், அவளை குழந்தையைப் போலவும். குழந்தை போலவும் பார்த்தான். காத்தாயி பதறினாள். "மொதலாளி... என்ன வார்த்தப் பேசிப்புட்டிரு. இந்த அற்ப..." "இந்தா பாரு... இனிமேலும்... என்னை... ஜாதிய நம்பச் சொன் ளிையானா... எனக்குக் கெட்ட கோபந்தான் வரும். நீயும் பிச்சக்காரி... நானும் பிச்சக்காரன். இதுல மொதலாளி பட்டம் எதுக்கு நாம பட்டத்தைக் கேட்டுக் கேட்டே... பட்டா நிலத்தக்கூட விட்டுட்டோம்..." "நீரு. சொன்னவுடனே ஞாபகம் வருது... நீரு இருக்கிற இந்த வீடு பட்டா நிலம் இல்லியாம். புறம்போக்காம். வீட்டை பதினைஞ்சி நாளையில காலி பண்ணாட்டால், இடிப்பாங்களாம். தாசில்தார் நோட்டிஸ்ல கையெழுத்துப் போட்டுட்டாராம். நாளைக்கு ஒமக்கு வருமாம். சின்னான் சொன்னான். நான் இதைச் சொல்லத்தான் ஒடிவாரேன்...!" "அப்படியா வரட்டும் இந்த போஸ்ட்மாஸ்டர். இந்த இதமட்டும் கிழிக்காம கொடுத்துடுவான்... நோட்டிஸ் வரட்டும். அப்புறம் பார்த்துக்கிடலாம். இவன் ஒவ்வொருவனையும் சுவர்ல ஒட்டுற நோட்டிஸ் கிழிக்கது மாதிரி கிழிக்கப்போறேன்." காத்தாயி, எந்தவிதப் பதிலும் பேசாமல், குழந்தைக்குப் பால் கொடுத்தாள்... குழந்தை, கால்களை துள்ளிக் கொண்டு. கைகளை ஆட்டிக்கொண்டது. பசு மாட்டின் மடுவை, முட்டிக் குடிக்குமே... கன்றுக்குட்டி, அதுமாதிரி... பெறாமல் பெற்ற அந்தத் தாயின் கால்களை,