பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 69 "காளியம்மா... ஒன்னையே கும்பிட்ட என் மார்புலயே... சூலாயுதத்தால குத்துதியே... என்னை ஒரேயடியா கொல்லு... என்னைக் கொன்னு, என் அண்ணாச்சிக்குப் பலத்தக் கொடு. அய்யோ... என்னால தாங்க முடியலியே வலி தாங்க முடியலியே... அண்ணாச்சி... அண்ணாச்சி..." வெளியே, முகப்புத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்டியப்பன், பதறியடித்து உள்ளே ஒடி வந்தான். "என்னம்மா... எதுக்கு தாயி கூப்பிட்ட...?" மீனாட்சி, பல்லைக் கடித்துக் கொண்டாள். அவன் முகத்தையும். அதில் இழையோடியதுயர ரேகைகளையும் கண்டதும், தன் மார்புவலியை விண்டுரைக்கக் கூடாது என்று நினைத்தவள்போல், ஊசிபோல் குத்திய குத்தலை, உடம்பு முழுவதையும் சுண்டியிழுக்கும் நரக வலியை சகித்துக் கொண்டாள். அண்ணாச்சி... ஏற்கெனவே குழம்பி இருக்கான்... நாளைக்கி... திருநெல்வேலில... நடக்கப்போற விசாரணைக்காவ யோசிச்சுக்கிட்டு இருப்பான்... அதோட... இந்த தங்கம்மா, அவன உயிரோட சாகடிச்சிட்டாள்... நானும் அவன புதைச்சிடப்புடாது... என்னோட வேதணயச் சொல்லி அவன வேதனப்படுத்தப்படாது... என்ன ஆனாலும் சரி... ஆண்டியப்பன், மீண்டும் ஏதோ கேட்கப் போனபோது குழந்தை அழுதது. அழுதது என்பதைவிட, அழப் பார்த்தது. அழுவதற்கும் திராணி வேண்டாமா? ஆண்டி, குழந்தையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, முதுகைத் தட்டிக்கொடுத்தான். பிறகுதான் அதற்கு இரவு பால் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்தவன் போல். தங்கையைப் பார்த்து "ஒனக்கு அறிவிருக்காழா... நான்தான்... அது இதை நிணச்சி... மறந்துட்டேன். நீயுமா..." என்று அவன் சொன்னபோது, எனக்குள்ள பால் இருந்தும் குழந்தைக்குக் கொடுக்க முடியல... ஒன் மனசுக்குள்ள நியாயம் இருந்தாலும்... அது ஒனக்குக் கிடக்கலியே... அதுமாதிரி என்று நயத்துடன், சோகங்கரிக்கும் சுந்தரவாயால் சொல்லப்போனாள். முடியவில்லை. எழுந்த நாக்கை இழுக்க வைத்தது வலி. ஆண்டியப்பன், குழந்தையை தோளில் வைத்துக் கொண்டே, வீடு முழுக்கும் தேடினான். அடுக்களைப் பானைகள்... மேலே இருந்த பரண்... கீழே கிடந்த தகர டப்பா எங்கும், எதிலும் ஒரு இருபத்தைந்து பைசா கிடக்கவில்லை. இந்த லட்சணத்தில், நாளைக்கு திருநெல்வேலிக்குப் போகணும். பஸ் சார்ஜ், ஒரு ஆளுக்கு மட்டும் இரண்டு ரூபாய்... அதுவும் போவதற்கு மட்டும்... திடீரென்று அவன் மனதில் ஒரு ஆவேசம். பாளை அரிவாளுடன், பரமசிவம் வீட்டுக்குப் போய், மாட்டை அவிழ்த்துக் கொண்டு வரலாமா? வந்தால் மாடு வரும். இல்லையானால்