பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஊருக்குள் ஒரு புரட்சி வந்தா என்னப்பா என்று கேட்டுப் பார்ப்பதுபோல் கற்பனை செய்து கொண்டார். அறுக்கப்படுகிற ஆடு மாதிரி மானேஜரை பரிதாபமாகப் பார்த்தார். ஜம்புலிங்கம், நாற்காலியில் இருந்து சிறிது ஜம்ப் செய்து கொண்டே தீர்ப்பளித்தார். "வகுப்புக்கு வாரவன... சாப்பிடாதவனா காட்டுனால் ஒண்ணு மில்ல... வராதவன... வந்தவனா காட்டுனா... பெரிய தப்புமா..." "எப்போவாவது சாப்பாடு போட்டிருந்தாதான இந்த இழவு தெரியும்." வாய்தவறி வார்த்தையை விட்டுவிட்ட ஆசிரியை, மானேஜரை, வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் பார்ப்பது போல், பரிதாபமாகப் பார்த்தார். அதிர்ந்து போன ஜம்புலிங்கம், சிறிது நேரம் தன் முந்நாளைய குருவை கூர்ந்து பார்த்தார். நிதானமாகக் கேட்டார்: "ஒங்களுக்கு ரிட்டயர்ட் ஆக எத்தனை வருஷம் இருக்கு டிச்சர்?" ஆசிரியை, ஆபத்தைப் புரிந்துகொண்டார். ஜம்புலிங்கம் யாரையும் மரியாதையாக அழைக்கிறார் என்றால், அது ஆபத்து. ஆசிரியை, அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவாறே "வயசாக வயசாக எனக்கு மூளை குழம்பிப் போயிட்டுது. நீங்கதான்... பெரிய மனசு usঠতা6তেf..." ஆசிரியை மேற்கொண்டு பேசமுடியாமல் திணறியபோது, மானேஜர் மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டை லைட்டாக உருட்டிக் கொண்டே, மெளனமாக இருந்தார். ஐந்து நிமிடம் வரைக்கும், அவரிடம் நல்வாக்கை எதிர்பார்த்து நின்ற கண்ணாடி ஆசிரியை, மருவிக் கொண்டே, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தார். அப்படி அவர் இறுதியாகத் திரும்பியபோது "இடும்பன்சாமிய வரச் சொல்லுங்க... நீங்க எப்டிப் போட்டாலும் கவலைப்பட மாட்டேன். மிஞ்சி மிஞ்சிப் போனால், டெப்டி இன்ஸ்பெக்டருக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கும்... அவ்வளவுதான். சரி... போய் இடும்பன்சாமியை வரச்சொல்லுங்க,.." என்றார். கண்ணாடி ஆசிரியை, காலில் கண்ணாடி குத்திவிட்டதுபோல் துடித்துக் கொண்டே நடந்தார். இடும்பன்சாமியை கூப்புடுறானே... டிஸ்மிஸ் ஆனால் பென்ஷன் கிடைக்காதே.. கண்ணாடி ஆசிரியை சொன்னதும், இடும்பன்சாமி, மானேஜரின் அறைக்குள் வந்தார். இந்த சாமிக்கு நாற்பத்தைந்து வயது. ஆஜானுபாகுவான தோற்றம். இடும்பன், மலைகளைத் தூக்கினான் என்றால், இவர் ஜம்புலிங்கம் சார்பில், தென்காசிக்கு, பால்பவுடர் டின்களையும். கோதுமை மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு போகிறவர். அந்தக் காலத்தில் சிலம்பு விளையாடியவர். "கூப்பிட்டிங்களா... மீசைக்காரன் வண்டி போவுது... கோதும மூட்டய ஏத்தட்டுமா... சின்னான் பய ஊர்ல இல்ல..."