பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 75 ஜம்புலிங்கம், அவரை உட்காரும்படி சைகை செய்தார். அதற்கு முன்பாகவே சாமி உட்கார்ந்தார். உச்சி வெயில், சிலபஸ்", ஆண்டியப்பன், சின்னான். டெப்டி இன்ஸ்பெக்டர் முதலியவர்களைப் பற்றிப் பேசிவிட்டு, கூட்டுறவு விவகாரத்தை ஜம்புலிங்கம் தற்செயலாகக்" கேட்பவர் போல் கேட்டார்: "ஆமாஞ் சாமி. நீரு. கூட்டுறவுத் தலைவர் கிட்டே ஏதோ தகராறு பண்ணுனியராம்..." "நான் பண்ணல... அவருதான் பண்ணுனாரு... செத்த மாட்டுக்கு எவன் ரூபா கொடுப்பான்..." "வாங்கும்போது சாகல இல்லா?" "மாடு வாங்கும்போது சாகல... நான்... உறுப்பினராயும ஆகல... சட்டப்படி அவரு என்ன செய்யனுமோ செய்துக்கட்டும்..." "அப்படிச் சொன்னா எப்டி ஒமக்காவ... எங்க பெரியய்யா நஷ்டப் பட முடியுமா... நீரு சொல்லுததுல ஒரு நியாயம் இருக்காண்டாமா?" "பின்ன என்ன... அந்த கருமயில... இவன். கன்னையாகிட்ட இப்போ இருக்கே... அந்த மாட்ட கேட்டேன்... அது இப்போ கல்லு மாதிரி இருக்கு... கேட்ட மாட்ட தராம... கேளாத மாட்ட தந்தாரு... திட்டம் போட்டே சாவுற மாட்ட தந்துட்டாரு..." "அவரு... அப்படி நினைச்சிருந்தா... ஒமக்கு... சட்டவிரோதமா தந்திருப்பாரா... எப்படியோ நேரு சீரா போகணும்." "நேரு சீருன்னா?" "பணத்தைக் கட்டணும்." "சொல்லப் போனால்... அவருதான் மாட்டுக்குப் புண்ணாக்கு வாங்கிப் போட்டதுக்குக் காசு தரணும்." "கடைசியா நீரு என்ன சொல்lயரு?" "நீங்க என்ன சொல்றிய?" "பணத்த கட்டுமுன்னு சொல்லுதேன்." "கட்ட முடியாதுன்னு சொல்லுதேன்." "நான் சொன்னாக் கூடவா?" "கடவுளே சொன்னாலும்..." "இந்தப் பாரும்...இது நல்லா இல்ல..." "சரி, வேற பேச்சுப் பேசலாம்..." "ஏன்?" "இது ஒங்களுக்கு சம்பந்தமில்லாத பேச்சு..." "சம்பந்தம் இருக்கு... நீரு கோலத்துக்குள்ள குதிச்சா, நான் புள்ளிக்குள்ள குதிப்பேன்... கூட்டுறவு சங்கத்தில மெம்பர் ஆகாமலே... கடன் வாங்கி, சர்க்கார ஏமாத்தி... மோசடி செய்ததுக்காக... மானேஜர்