பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஊருக்குள் ஒரு புரட்சி என்கிற முறையில... ஒம்மை. நான் சஸ்பெண்ட் பண்ணலாம். தெரியுமா...?" "பொய் சர்டிபிக்கட் கொடுத்தது - இருந்த பீ.ஸிய கிழிச்சிப் போட்டது... கோதுமய வித்தது... பால் பவுடர டிக் கடைக்கு வித்தது... இவ்வளவயும்... நான் எழுதிப் போடலாம் தெரியுமா...?" "சரி. நீரு. ஒம்ம்ால ஆனதப் பாரும். நான் என்னால ஆனத பாக்கிறேன்..." "இப்பவேயா... அப்புறமா...? எப்போன்னாலும் நான் ரெடி..." ஜம்புலிங்கமும், இடும்பன் சாமியும் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டார்கள். யார் முதலில கண்ணை எடுப்பது என்ற போட்டியில், விழியாடாமல் விழி விலகாமல் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில், ஒரு இளம் ஆசிரியை அங்கே வந்தாள். "இதயும். எழுதிப்போடுறேன்... இங்க... பள்ளிக்கூடத்துக்குப் பதிலா... தேவதயா குடி நடக்கும்..." என்று சொல்லிக் கொண்டே, இடும்பன்சாமி வெளியேறினார். இடும்பன்சாமியை, எல்லா ஆசிரியர்களும் மொய்த்துக் கொண் டார்கள். அவன் ஆம்புளன்னா சஸ்பெண்ட் பண்ணிப் பார்க்கட்டும். என்று இடும்பன்சாமி விடுத்த சவால் மூச்சு, ஜம்புலிங்கத்திற்கு நன்றாகக் கேட்டது. சும்மா சஸ்பெண்ட் என்று மிரட்டிப் பார்க்க நினைத்த மான்ேஜர், இப்போது பெரியப்பா மகனான கூட்டுறவுத் தலைவருக்கு மாட்டுப் பணம் கிடைக்கவேண்டும் என்பதைவிட, தான் ஆம்பிளை, என்பதை நிரூபிப்பதற்காக, வேறு வழியில்லாமல், ஒரு காகிதத்தை எடுத்து எழுதினார். தப்பு. எழுதியது அந்த இளம் ஆசிரியை. கையெழுத்துப் போட்டது ஜம்புலிங்கம். கொடுக்கப் போனது பியூன். இடும்பன்சாமி சஸ்பெண்ட் காகிதத்தை கையில் வைத்துக் கொண்டே ஜம்புலிங்கத்திடம் வந்தார். கால் கையெல்லாம் ஆடியது. கர்ஜித்தார். "முதல்ல... என்கிட்ட நீங்க விளக்கம் கேக்கணும்... அப்புறம்தான் சஸ்பெண்ட் பண்ண முடியும். சட்டந் தெரியாத பயலுவ மானேஜரா வந்தா..." "யோவ். மரியாதி கொடுத்து மரியாதி வாங்கு... நான் பண்ண வேண்டியத பண்ணிட்டேன்... நீ இனிமே செய்ய வேனடியத செய்துக்க..." இடும்பன்சாமி செய்ய வேண்டியதைச் செய்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஜம்புவின் தலையைப் பிடித்துக் கொண்டு, மேஜையிலே குத்தினார். மேஜை, கீழே விழுந்தது. அதற்குமேல், மானேஜர் விழுந்தார். இடும்பன்சாமி விடவில்லை. ஜம்புலிங்கத்தின் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு. அந்தரங்கத்திற்குக் கொண்டு வந்தார்.