பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தார். நான் தனியாக எழுதிய நான்கு அத்தியாயங்களைப் படித்து, அவற்றை மேலும் செம்மையாக்க பல ஆலோசனைகளை வழங்கினார். எனது நூல் வெளிவருவதை தனது சொந்தப் படைப்பு வெளிவருவது போல் பெருமிதப்படும் எழுத்தாளரான சோமுவுக்கு என் நன்றி. இதுவரை வெளியான எனது படைப்புகள் அத்தனையிலும் சம்பந்தப்பட்டதுடன், அவை, எந்த விதமான வரவேற்பைப் பெறும் என்று துல்லியமாகக் கணிப்பதில் வல்லவர் சோமு. என் படைப்பில் பெருமைப்படுபவர். எழுத்தாளர்களில், இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள்? விரல்விட வேண்டிய அவசியமே இருக்காது. இந்த நாவலின் இறுதிக் கட்டத்தில் ஒரளவு பிரச்சார வாடை வீசுவதுபோல் ஒரு கருத்துத் தோன்றியது. எனக்கும் அது சரியெனப் பட்டது. பாத்திரங்கள். தங்கள் கொள்கைகளை செயலாக்கும்போது, அவை பேச வேண்டுமா என்ற நியாயமான சந்தேகம் வலுப்பெற்று. நான், பேச்சைக் குறைக்கப் பேனாவை எடுத்தபோது, 'நாவலின் ஆன்மாவே இதுதான், இது பிரச்சாரம் அல்ல. எதைச் சொல்வதற்காக நாவல் எழுதினரீர்களோ... அதுதான் இது என்று வாதாடி வெற்றி கண்டவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னைக் கிளையின் செயலாளர் கவிஞர் இளையபாரதி. பிரபல பத்திரிகைகளில் அழுத்தமான பாத்திரங்களைப் படைப்பது கடினமான காரியம். வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள், விற்பனைப் பொருளாகி, நாளடைவில் வெறும் பொருளாய்ப் போனதுக்குக் காரணமே, இந்தச் சூழல்தான். இந்த நிலை எனக்கு வராமல் போனதற்குப் பெருங்காரணம் தாமரைப் பத்திரிகையே. அந்தப் பத்திரிகையில நான் பெற்ற பயிற்சி பிரபல பத்திரிகைகளிலும் எதிரொலிப்பதை அறிவீர்கள். இந்தப் பயிற்சியை அளித்தவர், கவிஞர் கே.ஸி. எஸ். அருணாசலம் அவர்கள். கவிதை என் கைவாள் என்று அவர் சொன்ன ஒரு வரியை. நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஓராயிரம் வரிகளை எழுதியிருக்கிறேன். இலக்கியத்தை. நான் போர்ப்பரணியாகக் கருதுவதற்கு உருத்தந்தவர் கே.ஸி.எஸ். எனது எலலாக் கதைகளையும் வரிக்கு வரி படித்து. ஒளிவு மறைவு இல்லாமல் விமர்சித்து ஒளி பாய்ச்சியவர். அவர் மூலமாகவே, முற்போக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது. கவிதை உலகில் என்னை அறிமுகப்படுத்தியவரும் அவரே. நான் எப்படி என் படைப்புகளை நினைத்துப் பெருமைப்படு கிறேனோ அப்படி, அவர் என்னை நினைத்துப் பெருமைப்படுபவர். இந்த நாவலின் பாத்திரங்கள் அழுத்தமாக உள்ளன என்றால், அதற்கு அவரளித்த அழுத்தமான பயிற்சியே காரணம். இந்த நாவலை, மறைந்த பேரறிஞர் நா. வானமாமலை அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இளந்தலைமுறையின ருடன், தலைமுறை இடைவெளி இல்லாமல் பழகிய அந்த இனிய அறிஞர், இந்த நூலைப் படிப்பதற்கு இல்லையே என்று நினைக்கும் போது சங்கடமாக இருக்கிறது. நான் ஆய்வுக் கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த அவருக்கு என் புரட்சி வணக்கங்கள். என் படைப்புகளில், வாசகர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.