பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாவலை, நல்ல முறையில் வெளியிடும் மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு, குறிப்பாக அச்சுக் கரம் நீட்டிய பேராசிரியர் மெய்யப் பனுக்கும், இந்த நாவலை வரிக்கு வரி விமர்சித்து, ஊக்கப்படுத்திய நாவலாசிரியரும் அச்சகத்தின் மேலாளருமான க. நாராயணன் அவர்களுக்கும். பதிப்பகத்தின் சார்பில் என்னுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு. பாலமாக விளங்கிய திரு. குருமூர்த்திக்கும் என் நன்றி. சிறுகதைகள் விலை போகாது என்று தெரிந்தும், என் சிறுகதைத் தொகுதிகள் மூன்றை விழாயெடுத்து வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகம், எனது எல்லாப் படைப்புகளையும் வெளியிட முன்வந்திருப் பதை எனக்களிக்கப்படும் மிகச் சிறந்த கெளரவமாகக் கருதுகிறேன். என்னடா இது... இவர் ஒரு லிஸ்டையே போட்டுக் காண்பிக்கிறாரே என்று வாசகர்கள் யோசிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்... எழுத்தாளன். தனித்தன்மை உள்ளவன் என்று நான் கருதவில்லை. அவன் ஒரு இலக்கியச் சூழலைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன். சமூகத்தின் விரும்பத்தக்க ஒரு தன்மையை தனது தன்மையாகக் கருதுபவனே எழுத்தாளன். இதில் தனித்தன்மையை இழப்பது என்பது. பரமாத்மாவுடன், ஜீவாத்மா இணைகிறபோது இன்பம் ஏற்படும் என்கிறார்களே, அது மாதிரி. தனித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக, சுய தன்மையை சமூகத் தன்மையாக நினைப்பவனோ, புகுத்துபவனோ, எழுத்தாளன் ஆகான். மரத்தைத் தாங்கி, மண்ணுக்குள்ளேயே இருக்கும் வேரைப் போல் ஒரு எழுத்தாளனை பலர், வெளியே தெரியாமலே தாங்கிப் பிடிக்கிறார்கள். படைப்பு பல படைக்கும் இவனைப் படைப்பவர்கள். இத்தகைய இலக்கிய நண்பர்களே. 'உன் நண்பர்களைச் சொல்... உன்னைச் சொல்லுகிறேன் என்பதுபோல், ஒரு எழுத்தாளனை, அவனைச் சுற்றியிருக்கும் இலக்கியவாதிகளை வைத்தே கணித்து விடலாம். இந்த வகையில், என்னைத் தாங்கிப் பிடிக்கும் ஆணிவேர்களை அடையாளப்படுத்தவே இதை எழுதினேன். நான் யார் என்று அடையாளங் காட்டவே, இவர்களைப் பற்றி எழுதினேன். நான் யார்? இந்த சமூக விடுதியில் ஒரு சர்வர். இவர்கள் சமையல்க்ாரர்கள். நீங்கள்? சாப்பிடப் போகிறவர்கள். சாப்பாட்டிற்காக வாழ்கிறீர்களா, வாழ்வதற்காக சாப்பிடுகிறீர்களா என்பதைச் சொல்லப் போகிறவர்கள். கடிதங்கள் மூலமாகச் சொல்லுங்கள். பத்திரிகை ஆசிரியர்கள், வெறும் வியாபாரிகளாக மாறிக் கொண் டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தக் கதையைத் துணிந்து பிரசுரித்த திரு. ராமச்சந்திர ஆதித்தனுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பன், சு. சமுத்திரம்