பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஊருக்குள் ஒரு புரட்சி "அதெப்டி... வயலு விவகாரம் வயலுலயே தீரனும்... எங்க ஜனம் ஒங்க ஜனமுங்ற கத வேண்டாம். சின்னான் சொன்னதுல தப்புல்ல... ஒங்க ஜனம்... எங்க ஜனங்குறதுல்லாம்... ஊர ஏமாத்துற வேல..." பெரும்பாலான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பேசாமல் நின்றார்கள். பிரச்சினை, வகுப்புவாதமாகிவிடக்கூடாது என்பதற்காக, சின்னானும் விட்டுக் கொடுத்துப் பேசினான். "சரி போகட்டும். மாசானம் பிச்சாண்டிய கட்டி வச்சதுக்காக வெள்ளாமையில... அவருக்கு கால்வாசிதான் கொடுக்கணும். மீதி பிச்சாண்டிக்குப் போகணும். இல்லன்னா வம்புதான்..." கதிர்வேல் பிள்ளை கறாராகப் பேசினார். இந்தப் பள்ளுப்பறை எதிர்ப்பை, மாசானம் - பரமசிவம் வகையறாக்களால் தாங்க முடியும். நம்மளால முடியுமா... ஒத்த வீட்டுக்காரன். இவனுவளயும் நாம பைக்குள்ள போட முடியாட்டாலும்...கைக்குள்ள போட்டுக்கணும்... "சரி மாசானம்... நீ விட்டுக்கொடு... கடவுள் ஒனக்கு... காண்டி ராக்ட்ல கொடுப்பாரு..." மாசானம், மெளனச் சம்மதத்தோடு இருந்தார். பரமசிவம், பொதுப்படையாகப் பேசினார்: "ஆமாம். கதிர்வேல் பிள்ள சொன்னது மாதுரி... மாப்பிள்ள செய்திடணும். பிச்சாண்டி... ஒமக்கு முக்கால் பங்கு நெல்லு வர... மச்சான் ஜவாப்பு. சரி... எல்லாரும் போயி வேலயப் பாருங்க... என்ன சின்னான். நீயும் ஒரு நஞ்சை வாங்கிப் போடப்படாதா..." சின்னான் விளையனானான். "எனக்காக வாங்காட்டாலும், பிறத்தியாருக்காக வாங்கணு முன்னுதான் இருக்கேன். நேரம் வராண்டாமா..." அவன் சொன்னதை பரமசிவம் புரிந்துகொண்டது போலவோ, புரியாதது போலவோ காட்டிக்கொள்ள வில்லை. சிரித்துக் கொண்டார். பெரும்பாலானவர்கள் போய்விட்டார்கள். சின்னானைச் சுற்றி பல விவசாயக் கூலிகள் சூழ்ந்தார்கள். ஒரு ஜாதிக்கூலி, திட்டுவது மாதிரி பேசினார்: "ஒனக்கு தைரியம் போதாது சின்னான்... குமார் பயல... நாக்கப் பிடுங்கிச் சாகிறதுமாதிரி கேட்டிருக்கணும்... நாங்க உயிரோட இருக்கிற வரைக்கும் ஒன்மேல ஒரு துரும்புகூட விழாது..." சின்னான் லேசாகச் சிரித்தபோது, இன்னும் குன்னிப்போய் நின்ற பிச்சாண்டி, சின்னானின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மினான். சின்னான், அவனுக்கு ஆறுதல் சொன்னான்: "அழாதிங்க... நாம் அழவைக்கிறவங்கள அழ வைக்கிறதுக்காவ பிறந்தவங்க... நாமே அழுதால் எப்படி?" பிச்சாண்டி தன் கண்ணிரை, வெட்டரிவாள் வீச்சுப் போல் கண்டிவிட்டான்.