பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 12 ஆண்டியப்பனுக்கு மாட்டுப் பிரச்சினையோடு வீட்டுப் பிரச்சினையும் வந்தது. அவன் புறம்போக்கு நிலத்தை ஆக்ரமித்து வீடு கட்டியிருப்பதாகவும், அதை ஏன் இடிக்கக் கூடாது என்றும் தாசில்தார். நோட்டிஸ் அனுப்பி இருந்தார். கோபால், பதிலெழுதிக் கொடுத்திருந் தான். தலைமுறை தலைமுறையாக இருக்கும் வீட்டை இடித்து, அந்த இடத்தில் இருந்து தன்னை வெளியேற்ற அரசாங்கத்திற்கு உரிமை யில்லை என்று அவன் எழுதிய காகிதத்தில் கையெழுத்துப்போட்டு, தாசில்தாருக்கு, கோணச்சத்திரம் போய் தபாலில் போட்டான். ஒரு வாரத்திற்குப் பிறகு, நோட்டிஸிற்கு ஏன் பதிலனுப்பவில்லை என்று. தாசில்தார் மீண்டும் கடிதம் போட்டிருந்தார். ஆண்டி, மீண்டும் கோபால் மூலம் பழைய கடிதத்தின் நகலோடு, புதிய கடிதத்தையும் எழுதி, தாலுகா அலுவலகத்திற்கு நேராகச் சென்று. அங்கே இருந்த கிளார்க்கிடம் கொடுத்துவிட்டு வந்தான். நேற்று என்னடாவென்றால், ஒரு நோட்டிஸிற்கும். இரண்டு ரிமைன்டர்களுக்கும் அவன் பதில் போட வில்லை என்றும், நாளைக்கு மறுநாள் விசாரணை என்றும். அவன் போகவில்லையானால், அதற்கு அவனே பொறுப்பென்றும் தாசில்தார் குசலம் விசாரித்து கடிதம் போட்டிருந்தார். அதிர்ஷ்டத்தைப் போல், விசாரணையும் விசாரணையோடுதான் வரும்போலும்... தாசில்தாரின் இறுதிக் கடிதம் வந்த அதே நாளில், மாவட்ட கூட்டுறவு அதிகாரியிடம் இருந்து, ஒரு விசாரணைக் கடிதம் வந்திருக்கிறது. அதாவது, நாளைக்கு மறுநாள் மாடு சம்பந்தமாக விசாரணை இருப்பதாகவும், அவன். மாட்டின் உரிமைக்கான சகல தஸ்தாவேஜுகளுடனும் நெல்லைக்கு வரவேண்டும் என்றும் கடிதம் வந்திருக்கிறது. விடு போகாமல் இருக்கப் போவதா? மாடு வருவதற்குப் போவதா? இல்லாததை வரவழைக்க, இருப்பதை விட வேண்டியதிருக்குமோ... மாடு பெரிசா... வீடு பெரிசா... ஆண்டியப்பன் தீவிரமாக யோசித்து யோசித்து குழம்பிக் கொண்டிருந்தபோது, கோபால் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, திருநெல்வேலியில் நடக்கும் விசாரணையை ஆதாரம் காட்டி, வீட்டு விசாரணையை ஒத்திப் போடும்படி வட்டாட்சித் தலைவரை பணிவன்புடன் கேட்டுக்கொள்ளும் மனுவை எழுதிக்கொண்டு. தாலுகா அலுவலகத்திற்குப் போனான். கோபால், அவனுடன் போகவில்லை. போக வேண்டிய தேவையும் இல்லை. இப்போதெல்லாம் ஆண்டிக்கு தாலுகா மட்டத்தில் தனியாகப் போகும் தெளிவு ஏற்பட்டுவிட்டது. மாவட்ட மட்டத்திற்குத்தான் கோபால் தேவை. தாசில்தாரைப் பார்த்துவிட்டு. அப்படியே அரசாங்க ஆஸ்பத்திரியில் சிடுகிடுக்காத ஒரு டாக்டரைப் பார்த்து, கையில் காலில் விழுந்து. தங்கையின் மார்புப் புண்ணுக்கு, ஏதாவது மருந்து வாங்கிக் கொண்டு