பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

உபயன்யுவுக்கு, இதுவும் ஒரு சோதனே என்பது புரிந்தது. ரோசம் மிக்க அவன் அழுவான? அல்லது மண்டியிட்டு "இரக்கம் காட்டுங்கள்’ என்று கெஞ்சுவான ? குருதேவர் சொன்னதைக் குனிந்த தலை நிமிராமல் கேட்டான். கை கட்டி, பத்மாசனம் போட்டு தவம் செய்ய அமர்ந்தான். பிற மான வர்களுடன் குருதேவர் ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டார்.

காட்டிலே ஒரே இருட்டு. எத்தனையோ விசித்திரமான, பயங்கர ஒலிகள். ஆனல் உபமன்யு சற்றும் பயப்படவில்லை. 'இந்தத் தண்டனையை தைரியத்துடன் தாங்கிக்கொள் வேன்’ என்ற உறுதியுடன் கடவுளை நோக்கித் தவம் செய் தான். முதலில், இறைவா. என்னேக் காப்பாற்று. கண் பார்வையைத் திரும்பக் கொடு. அன்புவடிவானவனே, முட்டாள்தனமான என் செயல்களை மன்னிப்பாய். இன்று நான்

'கற்ற பாடத்தை மறக்கவே மாடடேன்’ என்று கதறின்ை.

வெகு விரைவில் உபமன்யு தியானத்தில் ஆழ்ந்து விட் டான். சிறிது நேரத்தில் அவன் அருகே அசுவினிதேவர்கள் என்னும் இரட்டையர் சோதி வடிவில் தோன்றியது போலி ருந்தது. அவர்கள்தான் வானுலக மருத்துவர் என்று குரு.

சொல்லியிருந்தது அவனுக்கு நினைவு வந்தது.

“எங்களை அழைத்தாயா உபமன்யு உனக்கு என்ன வேண்டும்?' என்று அசுவினி தேவர்கள் கேட்டனர்.

'எனக்குப் பார்வை திரும்ப வேண்டும்’ என்று வேண்டி ன்ை உபமன்யு. அசுவினி தேவர்கள் புன்னகையுடன் அவ னிடம் அற்புதக் குளிகையைக் கொடுத்தனர். உபமன்யு அதை வாங்கி, வாயில் போட எடுத்தான். உடனே தன் சபதம் நினைவுக்கு வந்தது. தின்ன நினைத்த குளிகையைக் கையிலே மூடிக்கொண்டான். "தேவர்களே, நீங்கள் அளித்த இந்தக் குளிகையை நன்றியோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று அடக்கமாகச் சொன்னன். -

“அது சரி. அதை விழுங்குவதற்கென்ன? என்ன தயக் கம்?’ என்று கேட்டனர் தேவர்கள்.

'ஏன? என் ஆசிரியர் அனுமதி இல்லாமல் ஒன்றுமே தின்னமாட்டேன்’ என்று பதிலளித்தான் சிறுவன்.

“மருந்து சாப்பிடக் கூடவா அனுமதி வேண்டும்’ என்ற னர் அஸ்வினி தேவர்கள், அவனைக் கூர்ந்து பார்த்து.