பக்கம்:எக்கோவின் காதல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

151

இருந்தான். புகைப்படலம் சலனப்படம் போல் அவனுக்குத் தோன்றியது. அதில் பழைய நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டி ருந்தன.

உத்தமபாளையத்தில் வேலுச்சாமி என்பவர் பல நிலங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய மகன் அரங்கசாமி அரங்கசாமி விடுமுறை நாள்களில் வயலுக்குச் சென்று வருவதுண்டு. நிலங்களைக் கறுப்பணன் என்பவர் மேற் பார்த்து வந்தார். கறுப்பணன் வீடு வயல் பக்கமாக இருந்தது. 'அரங்கசாமி வரும்போதெல்லாம் கறுப்பணன் அன்பாக வரவேற்று உபசரிப்பது வழக்கம். வாரந் தவறாமல் அரங்கசாமியும் வயலுக்குப் போய் வந்தான். அவன் போவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை . கறுப்பணன் குடிசையில் கட்டிளங் கன்னி ஒருத்தியிருந்தாள். அவள் அவனுடைய தங்கைமகள்; பெயர் பொன்னம்மாள். அவளுடைய உருவ அமைப்பு அரங்கசாமியைக் கவர்ந்தது.

வழக்கம்போல் ஒருநாள் வயலுக்குச் சென்றான் அரங்கசாமி. கறுப்பணன், வீட்டில் இல்லை. பொன்னம்மாள் மட்டும் இருந்தாள். பொன்னம்மாள் அவனை அன்போடு வரவேற்றாள்.

" உன் மாமா எங்கே?” என்றான் அரங்கசாமி.

"தேனிச் சந்தைக்குப் போயிருக்கிறார்” என்று அவள் பதில் சொன்னாள். சொல்லும்போது சிறிது நாணத்தோடு சொன்னாள்.

"தண்ணீர் கொஞ்சம் தருகிறாயா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் அவன்.