பக்கம்:எக்கோவின் காதல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

றாயே” என்று தட்டினேன். அப்பொழுதுதான் சுய உணர்வு வந்தவன் போல எழுந்தான்.

"ம்ம்! சுந்தரம்! உன் மாற்றத்திற்கும் நீ செல்லப் போகும் புதிய மார்க்கத்திற்கும் என் ஆசி” என்றான்.

"அப்பா! மாறா! ஆசியோடு மட்டும் நின்று விடாதே! உன்னுடைய முழு ஒத்துழைப்பும் இருந்தால்தான் அன்று திருமணம் சிறப்பாக நடைபெறும். நீதான் எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லிவிட்டுப் பிரிந்து விட்டேன்.

இரண்டொரு நாளில் என் நண்பன் மாறனைக் காணவேயில்லை. இருக்கும் இடமும் தெரியவில்லை.

பொங்கலும் வந்து சேர்ந்தது. திருமணம் விமரிசையாக நடந்தது. கடை முழுக்கன்று அவளை விதவையாகக் கண்டேன். இன்று அவள் விதவை என்ற சொல்லுக்குக் கடைமுழுக்குப் போட்டுவிட்டாள். வாழ்த்துகள் - பரிசுகள் - அடேயப்பா! சொல்லி முடியாது. சீர்திருத்தத் திருமணம் அல்லவா! வெளியூரிலிருந்து ஏராளமான கடிதங்கள் வந்திருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டுபோய் மாடியில் அவளும் நானும் ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டிருந்தோம். ஒரு கடிதம் மட்டும் என் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது. அது என் நண்பன் மாறன் கடிதம். ஆவலோடு பிரித்தேன். படித்தேன்.

ஆருயிர் நண்பா! உன் மணத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமைக்கு என்னை மன்னிப்பாயா? கட்டாயம் மன்னிப்பாய். நான் சீர்திருத்தம் பேசினேன். செயலில் காட்டவில்லை. அவளை - இல்லை மன்னிக்கவும் - உன்