பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44. முறையீடு

திருவும் அறிவும் திறனும் வலிவும்
உருவும் எழிலும் உயர்நன் னடையும்
பரிவும் கொடையும் பணிவும் புகழும்
மருவும் வரம்நீ இறைவா, தருவாய்.1

ஏழை எளியோர்க் கிரங்கும் குணமும்
ஊழைக் கடக்கும் உரமார் உளமும்
கோழைத் தனமாம் கோதில் மனமும்
பேழைப் பொருள்போல் பெரிதே தருவாய்.2

சீரும் சிறப்பும் செம்பொற் குவையும்
பேரும் திகழும் பெருநல் வாழ்வும்
ஊரும் எறும்பின் ஒருமைக் குணமும்
ஏரும் நிலனும் யாவும் தருவாய்.3

கலையின் நிறைவும் கலங்கா நிலையும் மலையின் உயர்வும் மணியின் தெளிவும் துலையின் நிறைபோல் துகளில் மொழியும் தலைவா, எமக்கே தருவாய் தருவாய்.4

வாய்மை வீரம் வண்மை முறைமை
தாய்மைத் தமிழில் தனிநற் புலமை துாய்மை இவைதாம் தொழுவோம் தரவே சேய்மைப் பொருளே, செவிசாய்த் தருளே. 5