உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்டதும், கற்றதும். காலைக் கதிரவன் தோன்றக் - கொடிய காரிருள் தூரங் கழிவதைக் கண்டான் சாலத் தெளிந்த அறிவால் - அவன் சஞ்சல நெஞ்சிருள் நீக்குதல் கற்றான் கூவுங் குயில் குரல் கேட்டு-இந்தக் குவலய மின்புறுங் கொள்கையைக் கண்டான் ஆவ லுடன் இசை பாடி-அவன் யாரையும் அன்பர்க ளாக்கிடக் கற்றான். ஓய்வொழி வென்பதில் லாமல்—என்றும் ஊவென் றியங்கும் நல் வாயுவைக் கண்டான் மாய்வுறு மட்டுந் தொழிலை- அவன் மகிழ்வுடன் நன்கு புரிந்திடக் கற்றான். நீல மலையும் நிமிர்ந்து-என்ன நேரினும் நிலைகலங் காமையைக் கண்டான் கால மனைத்தும் மலைபோல்- அவன் கலக்கமில் லாமல் நிலைக்கவும் கற்றான். பரந்த கடல்அலைக் கையால்-தன்னைப் பார்ப்பவர் தமைவர வேற்பதைக் கண்டான் விரிந்த மனத்துடன் நாளுர்- அவன் வீட்டில் விருந்தினர் கூட்டவும் கற்றான். வண்ணப் பிறைமதி தோன்றி - நிலவை வாரி வழங்கும் வயணத்தைக் கண்டான். தண்ணருள் மிக்கவ னாகி- அவன் தருமம தவறாமல் தான் செய்யக் கற்றான். பகலென்ன இரவென்ன பாறிக்-காலம் பசுமுளை பயிராக்கிப் பறிப்பதைக் கண்டான் சுக துக்க மாகவே மாறி-அவன் சொல்லாமல் செல்கின்ற சூக்குமம் கற்றான்.

11

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/11&oldid=1730681" இலிருந்து மீள்விக்கப்பட்டது