இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7. இடமில்லை எல்லை யற்ற அழகால்- கமழும் இனிய நறுமணத்தால் மல்லி கைம லர்க்கும்- எனது மனமி டங்கொடுக்கும். அள்ள மற்ற கண்கள் - அழகு கலந்தி ருக்கும் மேனிப் புள்ளி மான்களுக்கும் - எனது புலனி டங்கொடுக்கும். அயற்பு றத்தி ருந்து உருக அமுதம் போன்றி னிக்கும் குயிலின் குரலி னுக்கும்--நெஞ்சு குளிர்ந்தி டங்கொடுக்கும். கொஞ்சு கின்ற மழலை-பவளம் கொண்டு செய்த செவ்வாய் விஞ்சு மெழில் மகற்கும் - இதயம் விரிந்தி டங்கொ டுக்கும். துன்ப இருள்தொ லைத்து- அறிவாய்த் தூய ஒளிப ரப்பும் இன்ப மான தமிழுக் - கிதயம் இசைந்தி டங்கொடுக்கும். உயிர்க ளுக்கு ளுயிராய்-அகண்ட உலகெ லாம்நி றைந்த உயர்ந்த தெய்வி கத்துக் - குளந்தான் உயர்ந்தி டங்கொடுக்கும். பழிபொய் அச்சம் கோபர்-சூதாம் பாவம் பெற்றெ டுக்கும் அழிவு தேடுங் குணங்காள் - உமக்கென் அகமி டங்கொடாது!
12
12