இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14. இரவும், பிரிவும் முன்பிருந்ததைக் காட்டிலும் காதல் மூண்ட நிலைதனிலே அன்பன் வரவினை யன்றவள் - மிகவும் ஆவலாய்ப் பார்த்திடுவாள் உறங்க லாமெனக் கண்களை-மூடி உறங்க முயன்றிடினும் மறந்தி ருந்த நினைவுதான் - தோன்றி மனதை மயக்கிடுதே ! தூய மல்லிகைப் பூக்களும் - அந்தோ துன்பம் புரிகிறதே பாயும் தலையணை யாவுமே- அனல் பற்றி யெரிகிறதே கண்ணை மூட இமைகளை கடவு ளெக் காரணத்தால் வைத்த எண்ணி யேங்கும் மனத்தினை மூட எதுவு மில்லாது செய்தான் நாண மாகிய கட்டினுள் - நின்று நழுவிய தன்மனதைக் காண வேண்டு மினியெனின் விடியக் காத்திட வேண்டியதே! கரிநெ ருப்பி னிடையிலே - சிவக்கக் காய்ந்தசெம் பொன்னெனவே இரவி தோன்றுதற் கின்னமும்-ஊழி எத்தனை தான்செலுமோ! பருவ காலம் பொருந்தவே...-நெல்லில் பசுமுளை காணுமெனில் உரிய வைம்புல உணர்வினோர்- இதை ஒறுத்திடக் கூடுவதோ
20
20