இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15. முகிலின் கண்ணீர் அச்ச மற்றவனாய்த் - தவழும் அரச குமரனைப் போல் உச்சி வான் தனிலே - வெண்மதி ஊர்ந்து வருகையிலே சின்னஞ் சிறுமுகிலாய்- வானில் சிதறிக் கிடந்தவைதான் கன்னங் கருகரெனத்- திரண்டு கருவி எதிர்ந்திடவும். கண்ணன் திருவொளியில்- கொஞ்சம் கவர்ந்து கலந்து கொண்டு விண்ணி லெனை யெதிர்த்து - வீணாய் வெறுப்பை விளைவிப்பாய் பொன்னென் கதிர்முனையுன் - கண்ணைப் பொட்டை யாக்கிவிடும் என்னை யெதிர்க்காதே - விலகி எட்ட நடவெனவே அடிவ யிற்றினிலே- கண்கள் அமைந்தி ருக்கிறது பொடிய னே போடா- சும்மா பூச்சி காட்டாதே! வயிற்றில் கண்களையும் - முதுகில் வாயும் வைத்திருந்தால் இயற்றும் தொழில் போர்தான்-என்று ஏள னம் செயவே நாக்க றுந்ததுபோல் - முகிலும் நாண மடைந்ததுவாய் ஏக்கங் கொண்டழவே-கண்ணீர் இறங்கும் தாரைகளாய்!
21
21