உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அவன் ஊரி லுள்ளவர் யாவரிலும் முதல் உடையவ னாயிருந்தான் - அவன் யாரையும் பகை மூட்டிப் பிரித்துத்தன் அடிமைக ளாக்கிடுவான். பாவ மான செயல்களை நன்கு பழகுவ தற்கெனவே - அவன் ஆவ லாகத்தன் னாயு ளனைத்தையும் அற்பணஞ் செய்துவிட்டான். பிறரு ழைப்பினில் காலங் கழிப்பதில் பிரிய முடையவனென் - றவன் சிறிய தொந்தியும் சென்னிற மேனியும் செப்பிடும் மற்றவர்க் கே. சிறிய மீன்களைத் தேடிப் பிடித்துத் தின்னாமல் திருப்தியுடன் -- தினம் பெரிய மீன்கள் பிழைக்கும் படியயன் பிறப்பிக்க வில்லை யென்பான் புல்லுந் தவீடுமில் லாமல் பசுக்களைப் புலன்களில் மேயவிட்டு-நாளும் நல்ல பாலை நிறையக் கறப்பதும் நம்திற மென்றுரைப் பான் கல்வி நீதி கருணையொ டுண்மை கடவுளைக் காட்டிலுந்தன்-- திரண்ட செல்வ் மேமிக வன்மையுடையதாய் சிந்தையி லெண்ணிடுவான் காரி யங்கணக் கத்தனையும் மவன் கருத்துப் படி நடத்தி - அந்த ஊரி லுள்ளவர் யாவரி லும்முதல் உடையவ னாயிருந்தான்.

38

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/38&oldid=1730708" இலிருந்து மீள்விக்கப்பட்டது