உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.எச்சரிக்கை நீல முகிலினம் சால மொய்த்திடும் நீண்ட மலைதனிலே- மிகவும் நேர்த்தி யாயொரு பாறை நின்றது நிலையில் வாநி லையில் வேலைக் காரர்கள் கூலிக் காய்மரம் வெட்ட வருகையிலே - உருண்டு வீழ்ந்து கொன்றிடு மோவெ னும்படி வெருள வைப்பதுவாய் பணத்தி லான அப் பாறை மீ தொரு பாவி வீற்றிருப்பான்— அவனும் பார்வை தனைமிகக் கூர்மை யாக்கியே பகர்வன பயங்கரமாய் கணத்தி லிவ்வழி யாக வருபவர் காசு தந்திடுவீர்-மலைக்குக் காவ லாயிதன் மீதி ருக்கிறேன் கடவு ளாணையினால். பாவம் ஏழைகள் தந்த காசொரு பாறை யாய் வளர்ந்தும் - அந்தப் பாவி மகன் தினம் ஈவிரக்கமில் லாது படுத்திடவே ஏவ லாளிகள் தங்கள் நெஞ்சமும் இறுகி வரலாச்சு - இவனை இங்கி ருந்துதொப்ைப தென்றொரு எண்ண மெழ லாச்சு புத்தி மான்பல வானெ னும்மொழி புந்தி யில்புகவே-ஒருநாள் புகன்றனர் அட நீயு மெங்களைப் போன்ற வன் எனவே சத்தி யம் இனி மக்கள் யாவரும் சமமெ னச்சொலவே-உழைத்துச் சகத்தில் சுகித்திரு அன்றெனில் வரும் சாவு முறை யெனவே.

39

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/39&oldid=1730709" இலிருந்து மீள்விக்கப்பட்டது