உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. ஏமாற்றம் அந்த நல்ல நாளுக் காகவே- கலைஞன் ஆண்ட னேகம் காத்தி ருந்தனன் சொந்தத் தாயின் வீடு சென்றதன் -காதல் துணைவி வரவைப் பார்க்கும் ஒருவனாய். காத்த நாளும் வந்து சேர்ந்தது- கலைஞன் கவலை யற்றுக் களிக்க நேர்ந்தது பூத்த கொம்பு போன்று தன்மனை - அழகு பொலிய நன்கு புதுக்கி யாச்சுது. - நீல வானில் மின்னல் போலவே - அருகில் நின்ற அன்பு மனைவி யோடுதான் மாலை மஞ்சள் குங்கு மத்துடன் - தனது மனைமுன் வந்து மகிழ்ந்தி ருந்தனன் மங்கும் அந்த மாலை வேளையில்-இனிய மலர்ம ணங்க மழ்ந்த காற்றினில் தங்கள் மேனி புளகம் போர்க்கவே தவத் தாயின் வரவைப் பார்க்கு சேய்களாய் நாளும் போது மாக வானவர்-சுடர் நல்வீ ளக்கு பலவு மேந்தவே ஆளும் அவர்கள் தெய்வம் வந்தது- தம்மை ஆசி கூறி அவலம் தீர்க்கவே. அடியெடுத்து வைக்கும் இடமெல்லாம்-மலர்கள் அள்ளி அள்ளி வீசத் தமனியக் கொடிய சைந்த தென்னத் தெய்வமும்- கலைஞன் குடிலைத் தேடிக் கொண்டு வந்தது. இந்த ஊரி வின்னவன் குடில்-இருக்கும் இடமெ தென்று தெய்வம் வினவவும் தந்தி ரத்தில் காசு சேர்த்தவன் - தோன்றித் தனது வீட்டுத் தடத்தைக் காட்டினான் சிலையைப் போலத் திசைத்தி ருந்தனன்- இனிச் செய்வ தென்ன வென்று கலைஞனும் கலைஞன் வாழ்க! என்ற கூக்குரல்- அங்கு காது செவிடு படவொ லித்ததே.

47

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/47&oldid=1730726" இலிருந்து மீள்விக்கப்பட்டது