37. வேட்கை உயிருக் குயிரான உத்தம நண்பர்கள் யாவரும் - அறிவில் உயர்ந்தவன் நீயெனவே பெயரும் பொருளுமுன் வாசலைத் தேடி வருமொரு - பதவி பெறமுய லென்றுரைப்பார் துயரமில் லாத நற் றூயவா னத்தெழில் மீன்களே - உங்கள் தோழமை பெற்றிடும் நற் செயல்களை நாடியென் சிந்தனை வேகமாய்ச் செல்லுது- என்ன செய்குவன் நானிதற்கே. கூடப் பிறந்தச கோதரர் யாவரும் கூடியே மாட கூடங் களை யமைத்து ஆடலும் பாடலு மாக இருந்து வாழ்வோமெனச்- சொல்வர் அன்புடன் ஆதரவாய் தேடக் கிடையாத தேசு படைத்தவிண் மீன்களே-எனக்குச் சிறிதும் விருப்ப மில்லை நாடுது நீங்களிருக்கு மிடந்தனை யென்மனம்- இந்த ஞாலந் தனைவெறுத்தே. பெற்று வளர்த்தயென் தந்தையும் விரும்புவர்-பொருள் பேணிப் பெருகிடவே குற்றங் குறையுமில் லாதவ னாகநூ றாண்டுகள் - வாழ்ந்து குவலயத் தின்பமுற முற்றிலும் பொன்னுடல் பெற்றொளிர் கின்ற விண்மீன்களே- மூளவில் லையீதிலும் (விருப்பம் சுற்றமாய்க் கொண்டும் யில் யானும் ஒருவனாய் வாழ்தலே- சுகமென எண்ணுகிறேன். (பெருஞ் வாழ்விலும் தாழ்விலும் உனனைப் பிரியலன் என்னவே- வந்த வாழ்க்கைத் துணைவியவள் ஏழ்கடல் வைப்பினுள் உள்ள சுகங்க ளனைத்தையும் -உமக் கீகுவ னென்றுரைத்தே தாழ்வறு மேனிலை தங்கிச் சுடரும் விண்மீன்களே - காமத் தழலிடை தள்ளுகிறாள் ஊழ்வினை கூட்ட மறுக்கினும் நீளி ருதவுவீர்- உம்மில் ஒருவன்நா னவதற்கே!
48
48