உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. உபதேசம் சகல சௌகரி யங்களும் - உடைய சடல முண்டாக்கி அகில மீதுபோய் வாவெனத் தெய்வம் அனுப்பி வைத்ததுகாண் வேனி லில்இளஞ் சூரியன்- உதிக்கும் வேளை யிருப்பது போல் ஆன தூயநல் லொளியையும் அமைத்து ஆசியுங் கூர்ந்தே. தூய நீரினி லாட்டியே-புதிய துணிக ளணிவித்து தாய னுப்பிய சேயென - உயர்ந்த தகைமை கைதரவே - அருமை யானயென் சீவனே-உலகில் யாது நேர்ந்திடினும் பெருமை குன்றிடும் காரியம். எதையும் பேண வொண்ணாது புத்தி போகுமப் போக்கிலே - மயங்கிப் புலன்கள் வசமாகி சத்தி யத்தை மறந்திடின் - மனித சன்மம் வீணாச்சு புனிதத் தன்மை யிழந்தபின் - இந்தப் பூமி யின் மீது மனித னென்றுயிர் வாழ்வதை - விடவும் மரண மினிதாகும் பழுதி லாதுபோய் வாவெனச் சொன்ன பரமன் முன்னிலையில் புழுதி பூசிய மேனியைக்-கொண்டு போக முடியாது.

55

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/55&oldid=1730718" இலிருந்து மீள்விக்கப்பட்டது