இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44. வாழ்க நேரு கலியு கத்து வரத னென்னக் கடவுள் தந்த நேருஜி! காலம் முழுதும் தேச நலனைக் கருதிப் பேணும் நேருஜி! இலங்கும் முகில்க ளொன்றுதிரண்டு இறங்கும் பருவ மாரிபோல் இயங்கும் கலைகள் முயன்று கற்று இசைவி ளங்கும் நேருஜி! கொலைபொய் சூது களவி லாது குவல யங்க ளிக்கவே குலவு கடலெ னப்ப ரந்த கொள்கை கொண்ட நேருஜி தலைக னக்கப் பேசிப் பேசித் தம்மைத் தாமே மாற்றுவார் தலைவ ராகக் காணும் கனவைத் தகர்த் தெறிந்த நேருஜி! அலகில் மாந்த ரனைவ ருந்தன் அருமை மக்க ளாகவே அன்பு காட்டி அரவ ணைக்கும் அறிஞர் நமது நேருஜி! உலகம் போற்றும் மனிதராகி ஒவ்வொ ருவரும் மகிழவே உயர்ந்த மேரு கிரியைப் போல் உறுதி காட்டும் நேருஜீ! மலைக லங்க நேர்ந்த போதும் மனங்க லங்கி டாதநம் மாண்பு மிக்க தலைவர் நேரு - மகிழ்ந்து வாழ்க! வாழ்கவே!!
56
56