உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய கவி வண்டு ஆசிரியர்- வெள்ளியங்காட்டான்; 56 பக்கங்கள், விலை ரூபாய் 1-0-0 கிடைக்குமிடம்:-சந்தே கவுண்டன் பாளையம் ஆலாந்துரை P. O. கோவை தினமணியின் மதிப்புரை எளிய கவிதையில் உயர்ந்த தத்துவங்களையும், பண்பையும் அழகாக வார்த்துப் பாமரரும் அறிஞரும் ரசிக்கும் வண்ணம் வெள்ளியங்காட்டன் எழுதிய அழகான கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. இயற்கை, வாழ்க்கை, நல்ல லட்சியங்கள்பற்றி வெள் ளியங்காட்டானின் உள்ளத் தொளிகள் படிப்போரின் மனதைக் கவ்விச் சிந்தனைச் சக்கரத்தை சுழலச் செய் கிறது. யோக வாசிஷ்டம் முதல் உபநிஷத் கீதை யெல்லாம் போதிக்கும் உண்மைகளின் சாரத்தை இரண் டொரு வரிகளில் அனாயாசமாகத் தருவது இவரது கவிதையில் உள்ள ஒரு விசேஷ அம்சம். மற்றவர் சுகங்களிலே - உனது மனம் மகிழ்த் திடப் பழகு மற்றவர் துயர் தனிலே-உனது மனங் கனிந்திட ஒழுகு. இதை ஒன்றைமட்டும் மந்திரமாகத் தமிழர் பின் பற்றி னாலே போதும். விடலாம். மகா உன்னத நிலையை எய்தி

தினமணி 8-10-1948.

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/57&oldid=1730716" இலிருந்து மீள்விக்கப்பட்டது