பக்கம்:எச்சில் இரவு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13


செல்லும்போது அவள் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டான். அதற்குப் பின்னர் அவளிடம் ஒரு கனியைக் கேட்டான். கேட்டவுடனே அவள், தன் வலக்கரத்தை அவனிடம் நீட்டினாள்.

“நான் உன்னிடம் கனியைக் கேட்டால் நீயோ உன் கரத்தை நீட்டுகிறாயே?” என்றான்.

“அன்றொரு நாள், “நீங்கள்தானே என் இடக்கரத்தை இன்சுவைக் கரும்பென்றும், வலக்கரத்தை வாழைப்பழம் என்றும் வர்ணித்தீர்கள். அதனால்தான் நீங்கள் கனியைக் கேட்டவுடன் நான் என் கரத்தை நீட்டினேன்” என்றாள்.

அவன் சிரித்தான்.

அவளும் சிரித்தாள்.

"பூவோ நல்லபூ——தொடுக்க முடியாது

முள்ளோ நல்லமுள்——எடுக்க முடியாது

அழைப்போ நல்ல அழைப்பு——போக முடியாது அது என்ன?” என்று அவன் அவளைக் கேட்டான்.

"அது எனக்குத் தெரியவில்லை” என்றாள் அவள்.

"தெரியாத ஒன்றை எனக்குத் தெரியவில்லை என்று, எளிதில் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் நீயோ, உடனே ஒப்புக் கொண்டுட்விடாய். இந்த நல்ல பண்பு வரவர நம்நாட்டில் வற்றிக்கொண்டேவருகிறது. உனக்கு உடனே புலப்படவில்லை என்றாலும், “உழைத்துப்பார், பின் அடுத்துக் கேள்” என்று கூறினுன்.

அவள் சிறிதுநேரம் சிந்தித்தாள். அந்தப் புதிருக்கு விடை அப்போதும் அவளுக்குப் புலப்பட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/23&oldid=1245101" இலிருந்து மீள்விக்கப்பட்டது