பக்கம்:எச்சில் இரவு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22


வேணுகோபால் நாயுடு என்பவர், அறிஞர் அரசஞ்சண்முகனாருக்கும் மருத்துவம் பார்த்த மகா மேதாவிகள். அதுபோலவே வலயவட்டத்தில் வாழ்ந்த தனுக்கோடி வைத்தியர் என்பவர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு வைத்தியம் பார்த்தவர். அவர் யார் தெரியுமா? அவர் என் முப்பாட்டன்.

ஷென்லுங் என்னும் சீன மருத்துவன் நூறு மூலிகைகளைத் தானே தின்று பார்த்து, அவை மருந்துக்கு நல்லவை என்று கண்டுபிடித்தானாம். என் பாட்டனாரோ ஆயிரம் மூலிகைகளைத் தின்றுபார்த்து அவற்றின் குணங்களைப்பற்றி அரியதோர் ஆராய்ச்சி நூல் எழுதியவர். அவர் டாக்டர் டி. எம். நாயரைப் போல் காது, மூக்கு, தொண்டை இவற்றைப் பற்றிய நோய்களைக் குணப்படுத்துவதிலும் வல்லவர் என் தந்தையும் இந்த நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லவர். என் தந்தை எதிலும் நிதானமானவர். மிகவும் சிக்கனமானவர். அதுவேண்டும் இதுவேண்டும் என்று நான் அவரிடத்தில் கேட்டால், கேட்டவுடனே அவர் வாங்கித்தரமாட்டார் என்று கூறினாள்.

அதைக் கேட்டவுடன் அவன் அவளை நோக்கி, “பாலானது அவ்வளவு விரைவில் தயிராவதில்லை. உலகத்தில் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏன்? நீயும் இப்படித்தான். நான் கேட்டால் நீ மட்டும் உடனே கொடுத்துவிடுகிறாயா என்ன?” என்றான்

“நீங்கள் கேட்பது, உணவாக இருந்தால் நான், அதனை உடனே கொடுத்து விடலாம். நீங்கள் அடிக்கடி என்னிடம் ஒற்றடம் அல்லவா கேட்கிறிர்கள். ஒருபெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/32&oldid=1197577" இலிருந்து மீள்விக்கப்பட்டது