பக்கம்:எச்சில் இரவு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23


தன் உதடுகளை உடனே கொடுத்து விடலாமா? என்றாள்.

அதைக் கேட்டவுடன் அவன் சிரித்தான்.

இரவு பூத்திருப்பதைப், போல, இந்த இலுப்பை மரங்களும் பூத்திருப்பதைப் பாருங்கள் என்றாள் அவள்.

இளவேனிற் பருவம் வந்தால் இலுப்பை மரங்களும் பூக்கும். வரிகிறப் பாதிரி அரும்புகளும் வாய்திறந்து மலரும் என்றான் அவன்.

“ஆமாம்! பாதிரிமரம் என்று அம்மரத்தை நாம் அழைக்கிறோமே, நம் நாட்டுக்கு வந்த கிறித்தவப்பாதிரிமார்களில் யாரோ ஒருவர் அம்மரத்தைத் தம் தோட்டத்தில் வளர்த்ததால், அதற்கு அப்பெயர் வந்திருக்குமோ?” என்றுகேட்டாள்.

நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே! முருகையன் என்னும் பெயருடைய ஒருவன், தன்னுடைய கொல்லையில் ஒரு முருங்கை மரத்தை வளர்த்தால், அம்மரத்தை முருங்கை மரம் என்று அழைக்காமல் முருகையன் மரம் என்று அழைத்தால், அதனை யாராவது ஒப்புக் கொள்வார்களா? என்று அவன் அவளைத் திருப்பிக் கேட்டான்.

அப்போது அவளது மெல்லிய தோளின் மீது இலுப்பைப் பூ ஒன்று விழுந்தது. அவள் அதனை எடுத்துப் பார்த்துவிட்டு, “இலுப்பைப் பூவுக்கு இரண்டு பக்கமும் ஓட்டை” இருக்கிறதே என்றாள்.

இலுப்பைப் பூவுக்காவது, வாயிலும் வயிற்றிலும் ஓட்டை இருக்கிறது. இந்நாட்டில் பலருக்கு, முதுகிலும் மூளையிலும் அல்லவா ஓட்டைகள் இருக்கின்றன, என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/33&oldid=1197602" இலிருந்து மீள்விக்கப்பட்டது