பக்கம்:எச்சில் இரவு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


"கொக்கோக நுட்பங்களை உன்னிடம் இளைஞர் களும் கற்றுக் கொள்கிருர்கள். இங்கு வரும் எலிகளும் கற்றுக் கொள்கின்றன” என்ருள் ஊசி.

'பார்த்தாயா! பார்த்தாயா! உண்மையைச் சொன் ல்ை நீ என்னை ஊசிபோல் குத்துகிருயே! இதனுல்தான் உனக்கு ஊசி என்று பெயரிட்டார்களா?’ என்று கேட்டாள் தங்கம். -

'அடி போடி பைத்தியக்காரி ஊசி என்று எனக்கு ஏன் பெயர் வைத்தார்கள் தெரியுமா? புதுவைக்கு அருகி லுள்ள கதிர்காமம் என்னும் ஊரில் ஆய் என்னும் தாசி ஒருத்தி இருந்தாளாம். அவளுடைய தங்கை ஊசி என்பவள் மிகப் பெரிய ஏரி ஒன்றை வெட்டினுளாம். ஊசி என்பவள் வெட்டிய ஏரி ஆதலின் அதற்கு ஊசி இட்ட ஏரி என்று பெயரிடப்பட்டது. ஊசி இட்ட ஏரியைத்தான் இப்போது நாமெல்லோரும் ஊஷ்ட்டேரி, ஊஷ்ட்டேரி என்று அழைத்து வருகிருேம். எக்காலத் திலும் பயன்படும் ஏரியொன்றை வெட்டியவளாகிய ஊசி என்பவளின் நினைவாகத்தான் எனக்கு ஊசி என்று பெயரிடப்பட்டதாம்’ என்ருள் ஊசி.

அப்போது தங்கம் அவளேப் பார்த்து, 'அன்ருெரு நாள் காமிருவரும் ஏழுர் காட்டுத் தலைநகரிலுள்ள ஏரியில் குளித்தோமே, அந்த ஏரியைக் கற்பகவல்லிசண்பகவல்லி என்னும் பெயருடைய இரண்டு தாசிகள் தாம் வெட்டினர்களாம். 14-ஆம் நூற்ருண்டில் வெட்டப்பட்ட அக்த ஏரியைப் பார்க்கும்போது, அதை வெட்டியவர்களின் வரலாறு என் நினைவுக்கு வருகிறது. அதே கேரத்தில், அவர்களின் முடிவை கினைக்கும் போது என் உள்ளம் வேதனைப்படுகிறது” என்ருள் தங்கம். - . . -

2289–4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/59&oldid=1001302" இலிருந்து மீள்விக்கப்பட்டது