பக்கம்:எச்சில் இரவு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


"உங்கள் மகள் தங்கம் உங்களுக்குத் தங்கமாக இருக்கலாம். ஆனல் இங்கு வரும் வாலிபர்களுக் கெல்லாம் அவள் ஒரு வண்ணத் தாமரை. அன்ருடம் விரிந்து குவியும் வெள்ளைத் தாமரைப்பூவில் சரஸ்வதி இருப்பாளாம்!” என்ருன் கவிஞன். -

'என் மகள் சரஸ்வதி அல்ல; அவள் ஒரு சரசவதி அவள் வெள்ளைத் தாமரைப்பூவில் இருக்கமாட்டாள். வெண்பட்டு மெத்தையில்தான் இருப்பாள்” என்ருள் தாய்க்கிழவி.

"அவள் ஒரு பேரழகி! அது மட்டுமல்ல, 60-انچے பாடல் ஆகிய கலைகளிலும் அவள் சிறந்து விளங்கும் சிங்காரி' என்ருன் கவிஞன். - -

“இத்தகைய சிறப்புகள் அவளிடத்தில் இருப்பதால் தான் இருபதாம் நூற்ருண்டு மாதவி என்று எல்லோ ருமே அவளேப் பாராட்டுகிருர்கள். அதிருக்கட்டும், தாங்கள் யார்? தங்களுக்கு எந்த ஊர்?’ என்று கேட் டாள் தாய்க்கிழவி. -

'கான் ஒரு கவிஞன். தேரழுந்துாரில் பிறந்தவன்' என்ருன் அவன். -

தாங்கள் தேரழுந்துாரில் பிறந்தவரா? கவிச்சக்கர வர்த்தி கம்பன் பிறந்த ஊரல்லவா அவ்வூர்?' என்ருள் அந்தக் கிழவி.

"ஆமாம்,

மன்னவனும் நீயோ?

வளநாடும் உன்னதோ?

உன்னே அறிக்தோ

தமிழை ஒதினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/61&oldid=1001304" இலிருந்து மீள்விக்கப்பட்டது