பக்கம்:எச்சில் இரவு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


காய்ந்த இறைச்சியையும், புதுத்தயிரையும் உண்ணக் கூடாது. உண்டால் ஆயுள் குறைந்துவிடும் என்பார்கள்" என்றாள் அவள்.

"பச்சை இறைச்சியும், பழைய தயிரும் இருக்கு மிடம் தெரிந்துதானே நான் இங்கு வந்திருக்கிறேன்" எனறான் அவன்.

மேட்டுக்கும் இரண்டு தொடைகளின் கூட்டுக்கும் தொகை தந்த இளைஞன் தங்கத்தைத் தழுவினான். அவள் தன் உதடுகளால் அவன் உதடுகளைக் கழுவினாள்.

"ஆற்றைக் கண்டவிடத்து அவிழ்த்து உண்னும் உணவை, 'ஆற்றுணா' என்பார்கள். அந்தச் சோற்று மூட்டையைத் தோளில் கோத்துக் கொண்டு செல்வதனால் அதனைத் 'தோட்கோப்பு' என்றும் சொல்லுவார்கள்" என்றான் அவன்.

"உங்கள் ஆசைப்பசிக்கு நான் ஆற்றுணவாகப் பயன் படவும், தோளில் கோப்பதற்குரிய தோட்கோப்பாக இருக்க்வும் தானே உங்களை இங்கழைத்து வந்திருக்கிறேன்" என்றாள் அவள்.

"கையினால் இதமாக, அதாவது பக்குவமாக எடுப்பதனுல் 'கையிதம்' என்று பெயர் வந்தது. கையிதம் என்னும் சொல்லைத்தான் இன்று நாமெல்லோரும் 'காயிதம்' என்று சொல்லுகிறேம்" என்றான் அவன்.

"பயன் படும் காகிதத்தையும் பக்குவமாக எடுக்க வேண்டும்.

பருவக் குமரிகளையும் பக்குவமாகக் கையாள வேண்டும்" என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/65&oldid=1317729" இலிருந்து மீள்விக்கப்பட்டது