பக்கம்:எச்சில் இரவு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


அன்றிரவை,

அன்றில் இரவாக்க வேண்டும் என விரும்பிய அவன் அவளிடம் நெருங்கினான். அவளோ சற்று விலகினாள். அவளது மேலாடை அப்போது அவளது மார்பை விட்டு விலகியது. பளிச்சென்று வெளியில் தெரிந்த அவளது பால் கலசங்களைப் பார்த்தவுடனே அவன் தன் கண்களை மூடிக் கொண்டான். அப்போது அவள் அவனைப் பார்த்து அத்தான் ! ஏன் கண்ணை மூடிக் கொண்டீர்கள்?" என்று கேட்டாள்.

அப்போது அவன் அவளைப் பார்த்து "ஊர்வசி என்பவள் தேவலோகத்தில் ஒருநாள் இந்திரன் சபையில் நடனமாடிய போது, அவளது மேலாடை மார்பகத்தை விட்டு விலகி விட்டதாம். அதனைக் கண்டவுடன் இந்திரனும் அம் மன்றத்தில் இருந்த மற்றவர்களும் அவரவர் கண்களை மூடிக்கொண்டு அவளுடைய மானத்தைக் காத்தார்களாம். அந்த நிகழ்ச்சி இப்போது என் நினைவுக்கு வந்ததால், உன் மேலாடைவிலகியதும் நானும் என் கண்களை மூடிக்கொண்டேன்" என்று கூறினான்.

அவள் அப்போது அவனைப் பார்த்து "ஒருசிலர், வீட்டில் இருக்கும்போது இப்படி நல்லவர்கள் போல நடிப்பார்கள். இதே காட்சியை வெளியில் அவர்கள் கண்டால், வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்" என்று கூறினாள்.

அதைக் கேட்டவுடன், அவன் தன் சொந்தச் சிரிப்பைச் சினமாக மாற்றினான். அவனது பழுத்த கோபத்தை அவள் பதமாக மாற்றினாள். பின்னர், அவனது கோபம் குறைந்தது. குறைந்த கோபம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/97&oldid=1315953" இலிருந்து மீள்விக்கப்பட்டது