பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி.என். அண்ணாதுரை . 117 பத்திரிகையில் படித்திருக்க முடிந்திருக்காது. நான், நண்பர் ஒருவர் மூலம் அவரது அந்தப் பேச்சை டேப் ரிகார்டு செய்துவரச் செய்து கேட்டேன். அவர் பேச்சில், இந்தித் திணிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று சுப்பராயன் போன்றவர்கள் சொல்லுவது முறையல்ல. உதாரணமாக: ஒரு கிழவி, என்னைக் கல்யாணம் செய்து கொள்' என்று ஒரு வாலிபனிடம் வந்து கேட்டால்,இப்பொழுது வேண் டாம். இன்னும் 10 ஆண்டு கழித்துப் பார்த்துக்கொள்ள லாம்' என்று வாலிபன் பதில் கூறுவதுபோல இருக்கிறது இந்தக் கோரிக்கை ! என்று பேசியிருக்கிறார். . . இந்த அளவு வந்த அவந், ஏன் திராவிட நாடு கேட்பதி லும் நம்முடன் சேரமாட்டார்? அவர் அன்றையப் பேச் சில். தென்னாட்டைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம். நாகபுரிக்குத் தெற்கே உள்ள பிரதேசம்' என்றே குறிப் பிட்டுக்கொண்டு வருகிறார். இதன் அர்த்தமென்ன? திராவிட நாடு என்று பச்சையாகச் சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு தான் அப்படிச் சொல்லியிருக்கிறார். இறுதியில் ஒரு இடத்தில் வந்து, 'திராவிடியன் கண்ட்ரி' என்றும் சொல்லி விட்டார்.வசிஷ்டர் வாயால் பிரிம்மரிஷி பட்டம் விசுவாமித்திரனுக்குக் கிடைத்ததுபோல். ஆச்சாரியார் வாயால், 'இந்தி இப்பொழுது மட்டுமல்ல. எப்போதுமே வேண்டாம். அது உத்தியோக மொழியானால் தமிழர் உரு வடவே முடியாது. திராவிடர்களுக்கு அது வேண்டாம் என்று பேசுவார் என யார் எதிர்பார்த்தார்கள்? நமக்கும் அவருக்கும் அதிக உறவு கிடையாது. ஒரே ஒரு நாள் அவரைச் சந்தித்தேன். அவ்வளவு தான். நான் சந்தித்ததும், பெரியார் கூட ஏதேதோ சந்தேகப்பட்டார். புராணத்திலே ரிஷிபிண்டம் இராத் தங்காது என்பார்களே, அதைப்போல, நானும் அவரும் சந்தித்த உடனே அவர் 1