பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 • திராவிடத்தைக் காப்போம். பொன் மொழிகள் என்று எழுதிவிட்டார். அடுத்து, இந்தி கூடாது' என்று பேசுகிறார். 'காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது' என்பார்களே, அதைப் போல நடந்துவிட்டது. 1,000 பேரைச் சிறையில் தள்ளியவர் ஏன் மாறினார்? கிருத்துவக் கல்லூரியில் அவர் பேசுகையில், மனிதன், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளக்கூட உரிமை இல் லையா ?' என்று கேட்கிறார். அதே முறையில்தான், இன்று யார் யார் சுயநலத்துக்காக நம் கருத்தை ஐயப்பாட்டுடன்- அச்சத்துடன் கவனிக்கிறார்களோ, அவர்களெல்லாம் நம் முடன் நெருங்கிவரப் போகிறார்கள். அதற்கு நம்மிடம் கட்டுப்பாட்டு உணர்ச்சி வேண்டும். விசித்தீரங்களில் ஒன்று ! பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் நடிக்கவும் நடிகர்கள் பொதுவாழ்வில் ஈடுபடவுமான சூழ்நிலை உண்டாகிவிட்டது. இதற்குக் காரணம் நான்தான், நாடகத்தின் மூலமாகத்தான் நல்லவிதத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும் நாட்டில் என்பதால்தான் இதைச் செய்ய வேண்டியதாயிற்று வேகமாக ஓடித் தேவைப்படும் இடத்தில் கொண்டு போய்விடும் குதிரைக்குக் கொடுக்கப்படும் கூலியை இது வரையில் வண்டிக்காரனே வாங்கி அனுபவித்தான். தனக் குத் தேவையானதைத் தேடிக்கொண்டான் என்பது மட்டு மல்ல, குதிரைக்காக வாங்கப்படும் கொள்ளையும் அவனே சமைத்துச் சாப்பிட்டுவிட்டான். பரிதாபத்துக்குரிய குதி ரைகள் பகுத்தறிவற்ற ஐந்துக்களாக இருப்பதால் அவை இளைத்து நோஞ்சான்களான போதும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை. ஆனால் இதே நிகழ்ச்சி ஒரு அரசியல் கட்சி யிலும் நிகழ்ந்தால் ... ? மிருகங்களால் பொறுத்துக்கொள்ள