பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 பொன் மொழிகள் இல்லாத கூட்டம் பாதை காண்பிக்கப் பாடுபடுவது இந்த நாட்டின் விசித்திரங்களில் ஓன்று. உறவும் உதாசீனமும்! அமைச்சர் பக்தவத்சலம் சட்டசபையில் சொன்னார்- 'காமராசர் பெரியாரைப் போய் பார்க்கமாட்டார்'-என்று அழுத்தந் திருத்தமாக அதைச் சொன்னார். தேர்தலுக்கு முன்னால் 'காமராசர் இங்குதான் உட்கார்ந் திருந்தார்: இந்த நாற்காலியில்தான் அமர்ந்திருந்தார்'-என் றெல்லாம் சொல்லி, அந்த இடத்திலே யெல்லாம் திராவிடக் கழகத் தோழர்கள் பூசை செய்யக்கூடிய அளவுக்கு பக்தி கொண்டிருந்தார்கள் இன்னும் இருக்கிறார்கள், தேர்த லுக்குப் பிறகு. காமராசர் ஏன் போய் பெரியாரைச் சந்திக்க வில்லை? தேர்தலுக்குப் பிறகு அவர் தேவையில்லை. எனவே, சந்திக்கவில்லை. முரட்டுக் கணவன்மார்கள், தேவைப்பட்ட நேரத்தில் உள்ளே சென்று மனைவியிடம் பெசி. கொஞ்சிவிட்டுத் தெருத் திண்ணையிலே வந்து படுத்துக் கொள்கிறார்களே. அவர்களுக்கும் காமராசருக்கும் என்ன வித்தியாசம்? — காமராசர், பெரியாரைச் சந்திக்க வேண்டுமென்று நான் சொன்னதற்கு, அமைச்சர் சொன்ன பதில் வெட்கப்படக் கூடியதாகும். பெரியாருக்கு காமராசர்மீது ஆசை: ஆனால் காமராசருக்குப் பெரியார்மீது ஆசை இல்லை' என்றார் அவர். இதற்கு என்ன பொருள்? அதன் பிறகுதான் அவர் சொன்னார் -அண்ணாதுரையே பெரியாரைப் போய்ப் பார்த்து, சமரசம் செய்யவேண்டும்'- என்று.