பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 121 நான் போகமாட்டேன் என்று சொல்லவில்லை. பெரியா ரிடத்திலே இன்று தொத்திக்கொண்டிருக்கும் பிள்ளைகளும், தத்துப் பிள்ளைகளும், நான் அவர் வீட்டுக்குள்ளே நுழைந் தால் வழிவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்; சமரசம் பேசவும் முடியும். ஆனால், அதுவரை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்டதும் அமைச்சருக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. சட்டத்தை நிறுத்தி வைக்கவும் முடிய வில்லை. இக்கட்டான நிலைமை ஏற்பட்டது அவருக்கு ! காரணம் சட்டசபை இப்படிப்பட்ட சட்டங்களைக் கண்ட தில்லை, சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. காரணம் சட்டத்தை நிறுத்திவைக்கும் அளவுக்கு என் கரத்துக்கு வலுவு இல்லை. நான் நெஞ்சத் தூய்மையோடு சொல்லிக் கொள்கி றேன்-15 பேருக்குமேல் அதிகம் சட்டசபைக்கு வந்திருந் தால் இந்தச் சட்டம் வந்திருக்காது. இந்தச் சட்டத்தை, எங்களைத் தவிர வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. சர்க்கஸ்காரர்கள், புலிகளுக்கு நடுவே புள்ளி மான்களை நிறுத்துவதுபோல, நாங்கள் மட்டுமே அத்தனை பேருக்கும் மத்தியில் நின்று சட்டத்தை எதிர்த்தோம். மதயானை முதலாளித்வம் ஒரு மதம் பிடித்த யானை. அந்த யானையைப் பிடித்து வாழை நாரினால் துதிக்கையைக் கட்டி அந்தக் கயிறை ஒரு வாழை மரத்தில் கட்டி விட்டு, பார் யார்! நான் முதலாளித்வத்தைக் கட்டிப் போட்டுவிட் டேன் ' என்று கூறினால் சரியாகாது!