பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 பொன் மொழிகள் யும் மகிழ்ச்சியும் அளிக்காமல் இல்லை : ஆனால் அதே நேரத் தில் பயத்தையும் கவலையையும் கூடவே அளித்துக்கொண்டு தான் இருக்கிறது. இவ்வளவு வளர்ந்திருக்கின்றோம் நாம்: இவ்வளவு பெரிய கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்கு நாமெல்லாம் ஆற்றல் உள்ளவர்களா என்ற எண்ணம். என்னுடைய உள்ளத்திலே அவ்வப்போது உறுத்திக் கொண்டிருக்கின்றது. உங்களிடத்திலே வெளிப்படையாகச் சொல்லிக்கொள் வதிலே நான் வெட்கமடையவில்லை : சட்ட மன்றத்திலே திறமை பெற முடியுமா முடியாதா என்பதைப்பற்றி எங்க ளுடைய உள்ளத்திலே என்றைய தினமும் ஐயப்பாடு ஏற் பட்டதில்: அதிலே. நல்லவர்கள் அல்ல' என்ற பெயர் எடுத்தாலும் கவலையில்லை: ஆனால். இவ்வளவு இலட்சக் கணக்கான மக்கள் - சிற்றூர்களிலேயுள்ள மக்கள்--பேரு ரிலே வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் - மதிப்புக் குரிய தாய்மார்கள் பொறுப்புள்ள பெரியவர்கள் - ஆர்வங் கொண்ட இளைஞர்கள் -படித்த வாலிபர்கள்-நல்ல அலு வல்களிலே உள்ளவர்கள் - இவர்களெல்லாம் ஆதரவு தரு இற அளவுக்கு இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி. முழுப் பலனை நாடு அடையத்தக்க வகையிலே நடத்திச் செல்லுவதற்கேற்ற ஆற்றல் எனக்கு உண்டா என்பதில் தான் எனக்கு ஐயப்பாடு! ஏழையினுடைய வீட்டில் அழகான பெண் பிறந்து, அவள் 10-வயதாகி, திருமணம் ஆகாவிட்டால், அந்த ஏழையினுடைய உள்ளத்தில் எப்படிக் கவலைதோன்றுமோ அதைப் போல வளர்ச்சியடைந்த இயக்கத்தைப் பார்க்கின்ற நேரத்திலெல்லாம் நான் கவலையடைகின்றேன். ஏழையி னுடைய வீட்டில் பெண் பிறந்தாட ஆபத்து ! அந்தப்பெண் அழகாகவும் இருந்தால் அதிகமான ஆபத்து!