பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி என். அண்ணாதுரை — 133 நாம் மிகச் சாமான்ய மானவர்கள் : நம்மிடத்திலே கிடைத்திருக்கின்ற இந்த இயக்கம் நம்முடைய கட்டுக்கும் அடங்காத அளவுக்கு இன்றைய தினம் வளர்ந்திருக்கின் றது. வளர்ச்சிக்கேற்ற அளவுக்கு நம்முடைய இயக்கத்திலே யலனைப் பெறவேண்டு மென்றால்-நான் சாதாரணக் கணக் கைச் சொல்லுகின்றேன் திங்கள் ஒன்றுக்கு தலைமைக் கழகத்தில் 5,000 ரூபாயாவது செலவிட்டால்தான் முடியும். அந்த அளவுக்குப் புதிய பொறுப்புகள் - அந்த அளவுக்குப் புதிய நிலைமைகள் - அந்த அளவுக்குப் புதிய வேலைகள் நம்முடைய கழகத்திற்கு ஏற்பட்டு விட்டன. அன்றாடம் வருகின்ற கார்டு. கவர்களுக்கு மட்டும் நம்முடைய கழகத் தோழர்கள் பதில் எழுதுவதென்றால் ரூ.10-க்கு தபால் கார்டு வாங்கினால்தான் முடியும். இன்றையதினம் இந்த ஊரிலிருந்து புறப்படுகின்ற நானோ, மற்ற எந்தத் தோழரோ. நாளைக்கு ஒரு ஊர்-மறு நாள் ஒரு ஊர் என்று தமிழ்நாடு பூராவும் சுற்றிவிட்டு. மறுபடியும் இந்த ஊருக்கு வரவேண்டுமென்றால்--நீங்கள் நான் சொல்லுவதிலே ஆணவம் இருப்பதாகக் கருதா தீர்கள்: உண்மை யிருக்கிறதென்பதை ஆராய்ந்து பார்த் தால் உணர்ந்து கொள்வீர்கள் - 5 வருடத்திற்குப் பிறகு தான் வர முடியும். அத்தனை இடங்களில் வேலை இருக்கு கிறது. உங்களுக்கு நான் சொல்லுவேன் -நான் சொன்ன அந்த ஏழை. தன்னுடைய வயிற்றிலேயே பிறந்த நல்ல அழகான பெண் பருவமடைந்து விட்டாள் என்று தெரிவ தற்கு முன்னாலேயே, அவள் பருவமடைவாள்-திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கின்ற பொழுதே. அவன் தான் கஷ்டப்பட்டு சேர்க்கின்ற சொத் தில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சப்படுத்தி, அடுத்த தைக்குக்