பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 பொன் மொழிகள் மாக முதலில் தீர்க்கப்படவேண்டும். இந்த மூலம் உணர்ந்து தான் திராவிடர் இயக்கம் சமூகக் கோளாறு. பொருளாதா க் கோளாறு எனும் இரண்டினையும் தாக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் பிரச்னை உலக அரங்கில் மிக முக்கியமானதாகவும், பலருடைய மனதை மருட்டக் கூடியதாகவும், தொழிலாளர் பிரச்னை வளர்ந்து விட்டது. நீதியையும் நேர்மையையும் சமுதாயத் தில் அமைதியையும் சுபீட்சத்தையும் விரும்பும் எவரும் தொழிலாளர் பிரச்னையை அலட்சியப் படுத்தியோ அல்லது அடக்கு முறைகளால் அழித்துவிடக் கூடுமென்றோ எண்ண முடியாது. பிரச்னை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டும் புதுப்புது உருவங்களைக் காட்டிக்கொண்டும் இருக்குமே ஒழிய. தானாக மங்கிவிடவும் செய்யாது; தாக்கு தலால் தளர்ந்தும் போய்விடாது. பொது அறிவும் ஜனநாயசு உணர்ச்சியும் வளர வளர பிரச்னை பலம் பெற்றுக்கொண்டு தான் வரும். விழிப்பு பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கொழில் முறை மாறிவிட்டது. உலகிலே அதற்கு முன்பு எந்த நாட் டிலும் குடிசைத் தொழில் முறையும் தேவைக்காக மட்டும் பொருளை உற்பத்தி செய்து கொள்வதுமாக இருந்துவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்டு, குடிசைத் தொழில்முறை மாறி யந்திரத் தொழில்முறையும். ஒரு சிலர் பலரை வேலைக்கமர்த்தி தொழில் நடத்தி உற்பத்தி யைப் பெருக்கி பண்டங்களை விற்று லாபம் பெறுவதுமான முறை வளர்ந்தது. இதனால் ஓரிடத்தில் ஏராளமான