பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 137 கூடி தொழில் செய்யும் முறையும் அந்தத் தொழிலின் லாபம் தங்களுக்குக் கிடைக்கும் கூலிபோக மீதமிருக்கும் பகுதி வேறிடம் போவதும் லாயிற்று. முரண்பாடு தொழிலாளர்களுக்கு விளங்க ஒரு புறம் வேலையில்லாத் தொழிலாளர்கள் தொகை தொகையாக இருப்பர். மற்றோர் புறம் தேவைக் கேற்ற அளவு சரக்கு கிடைக்காததால் தவிக்கும் மக்கள் இருப்பர். முதலாளியின் லாப நோக்கம் சில சமயம் சரக்கு களைத் தேக்கிவைக்கும். வேறு சில சமயங்களிலே சரக்குகளை மார்க்கெட்டை விட்டு விரட்டி யடிக்கும் அவசியமானது ஆகவே, செய்யப்பட வேண்டியது என்பதல்ல முதலாளித் வம்: வாபகரமானது, ஆகையால் செய்யப்படவேண்டியது என்பதே தத்துவம். 'மார்க்கெட் நிலவரத்துக்குத் தக்க படி முதலாளியின் டெலிபோன் பேச்சு அமையும். அந்தப் பேச்சின் விளைவாக எவ்வளவோ தொழிலாளரின் வாழ்வு சிதையும். சிதையும் வாழ்வை செம்மைப் படுத்துவது முதலாளித்வ முறையல்ல, ஆகையால்தான் முதலாளித்வ முறையுள்ள இடங்களிலே பண்டங்களின் தேக்கமிருந்தும் பட்டினி ஒருபுற மிருக்கிறது. பணம் சில இடங்களிலே குவிந்திருந்தும் பராரிகளின் பட்டியல் வளருகிறது தொழில் அபிவிருத்திக்கு வழியும் தேவையுமிருந்தும் வேலையில்லதார் உள்னர். முதலாளித்வம் முரண்பாடு நிறைந்த முகாம்! உலக வரலாறு ! வளமைபினருகே வறுமை ; பலத்தினருகே பயம். இது ஏன்? இந்தக் கேள்வி சாதாரண மக்களையல்ல, கருத் துலகின் காவலர்களாக விளங்கியவர்கள் அனைவரையும்