பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 பொன் மொழிகள் இருக்கும் தொழில் ஸ்தாபனங்களில் இருப்ப தென்றால் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்களின் ஜீவாதார உரிமை பாழ்படும். குறைகளை உணர்ந்து அவைகளுக்கு காரணம் யாவை என்பதற்குரிய விவாதத்திலே ஈடுபட்டு, உண்மைக் காரணத் தைக் கண்டுபிடித்து, பிறகு அவைகளைப் போக்கிக்கொள்ள முயற்சித்துப் பார்த்து முடியாதுபோன பிறகு தொழிலாளர் கள் ஓர் ஸ்தாபன ரீதியாக தமது குறைகளை எடுத்துக் கூறித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். தங்கள் வாழ்க்கை முறையும் தொழில் முறையும் தங்களுக்குள்ள வாழ்க்கை வசதிக் குறைகளும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஒரே விதமானதாக இருக்கக் கண்டு அனைவருக்கும் உள்ளது ஒரேவகை வியாதி என்று தெரிவ தால் அனைவருக்கும் ஒரே வகை மருந்து தேடவேண்டும் என்ற முடிவு செய்து ஸ்தாபனங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத்தன்மை கெடாதிருக்குமட்டும் ஸ்தாபனம் அவசியமானது மட்டுமல்ல, பயனுள்ளதுமாகும். ஐக்யம் குலைவதேன் ? தொழில் ஸ்தாபனங்களில் ஐக்யமும் பலமும் கெடா திருக்க வேண்டுமானால் ஐன்னல் கம்பியையும் ஜாக்கிரதை யுடன் கவனிக்கும் மாளிகைக் காரர்போல ஸ்தாபனத்தின் சகல உறுப்பினரையும் கவனித்து கட்டுக்கோப்பு கெடாத படி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த முறையை கவனி யாததால் தொழிலாளர் ஸ்தாபனங்களிலே ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டு அதன் விளைவாக அதனுடைய போரிடும் சக்தி சிதறிவிட்டதுண்டு. தாங்கும் சக்தி தாக்கும் சக்தி இரண்டும் ஒருசேர ஒரு ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கு ஏற்ற வகை