பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  1. . என் அண்ணாதுரை

147 யிலே அந்த அமைப்பு இருக்கவேண்டும், இருக்கவேண்டு மானால் இருவகை சக்திகளையும் திரட்டவும் திரட்டியதை உபயோகிக்கவும் ஏற்ப தகுதி படைத்தவர்கள் ஸ்தாபனத் தில் இருக்க வேண்டும். அடிப்படை வேண்டும் தொழிலாளர் ஸ்தாபனம் மனக்குறையின் மீதும், அதனால் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆத்திரத்தின் மீதும் ஏற்பட்டுவிடுவதுண்டு. இவை சரியான அடிப்படை யல்ல. வாழ்வதற்கு உழைக்கிறோம். ஆனால் வாழ்வு இல்லை! உழைக்காது வாழ்கிறார்கள். அந்த வாழ்வுக்குத் தங்கு தடையில்லை! 'வாழ்வோம் அனைவரும், வாழ உழைப்போம். ஒருவன் உழைப்பின் மீது மற்றொருவரின் வாழ்வு அமைக் கப்படும் அநீதியை ஒழிப்போம்' என்ற அடிப்படைகளின் மீது கட்டப்பட்டுள்ள தொழில் ஸ்தாபனங்கள், உன்னதமான லட்சியம் ஈடேறவேண்டும் என்ற ாேக்கத்தை உறுதுணையாகக் கொண்டு. ஸ்தாபனத்தின் நடைமுறையில் உறுப்பினர்களுக்குள் உள்ளக் கொதிப்போ கசப்போ ஏற்படாத வகையிலும், இன்னார் செய்கிற காரியம் இன்னார்க்கு சரியென் ற நிலை ஏற்படாத வகையிலும் ஸ்தாபனத்தின் மூலக் கொள்கைக்கு ஊறு நேரிடாத முறையில் நடத்திச் சென்றால் ஐக்கியம் கெடாது.பலனும் நிச்சயம் விளையும். கம்யூனிஸ்ட் பூச்சாண்டி இந்த பெரு தொழிலாளர் ஸ்தாபனத்தைத் திறம்பட நடத்தி தொழிலாளரின் அன்புக்குப் பாத்திரமாக வேண்டுமானால். அவர்களின் குறைகளை நீக்கியாக வேண்டும்... அந்தக் குறைகளை ஆராயும் எவரும், அவைகளை நீக்கவேண்டு மென்று பாடுபட முயற்சிக்கும் எவரும், அவர்களுக்காக