பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 எட்டு நாட்கள் களும், அவர்களின் கோட்டை என விளங்கிய சோர்போன் பல்கலைக் கழகமும், பகை கொள்ளும்; அதுபோது, தன்னால் கூட, ப்ரூனோவைக் காப்பாற்ற முடியாது என்றறிந்த மன்னன் இங்கிலாந்து நாட்டிலே இருந்த பிரன்ச்சுத் தூது வருக்கு ஒரு கடிதம் கொடுத்து அந்த நாடு சென்று வதியு மாறு, ப்ரூனோவுக்குக் கூறினான். ப்ரூனோ. இங்கிலாந்து வந்த சமயம், அங்கு, கலையும் காவியமும், வீரமும் காதலும், செல்வமும் சீரும். கொஞ்சி விளையாடிய, எலிசபெத் இராணியின் ஆட்சிக்காலம். இங்கு ரோம்நகர மத அதிபர்களின் ஆதிக்கம் இல்லை: மத விசாரணைக்கூடக் கொடுமைகள் இல்லை; புத்தம் புதிய போக்கு வரவேற்கப்பட்டது. பொற்காலம் என்று புகழ்ங் தனர். இங்கு ப்ரூனோவின் புகழ் வளர வழி இருந்தது- கொள்கையை எடுத்துக்கூறும் வாய்ப்பு ஏற்பட்டதும். மீண்டும் ஆபத்து ப்ரூனோவைத் துரத்தலாயிற்று. என்ன கொள்கை அது ? மத ஏகாதிபத்தியத்தை முறி யடித்து. ரோமாபுரியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்று லூதரின் புரட்சி இயக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்த இங் கிலாந்திலும், பகையை மூட்டிய, அந்தக் கொள்கை என்ன? இங்கிலாந்தில் மட்டுமல்ல, கால்வின் சித்தரித்த சீர்திருத்தத்தைச் செம்மையாக்கி வாழ்ந்த, சுவிட்சர்லாந்தி லும், ப்ரூனோவின் கொள்கைமீது சீறிப் பாய்ந்தனர். கத் தோலிக்க நாடுகள் மட்டுமல்ல. பிராடெஸ்ட்டென்டு காடு களும். பாபம்! மோசம் ! அக்ரமம் / அனுமதியோம் ! என்று கூவின : அப்படிப்பட்ட கொள்கையை ப்ரூனோ கூறி வந்தார். கொலை கொள்ளை என்னும் தீச்செயல் புரிகிறவனை மகா சன்னிதானம் என்று போற்றுகிறீர்களே. இந்த