பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 27 கிரேக்கநாடு தந்த அந்த அறிவுக் கருவூலம். அவர் காலத்தில், அவருக்கு இருந்த வசதிகளுக்கு ஏற்ற வகையில், அவர் காலத்துச் சுற்றுச்சார்பின் படி ஆராய்ந்து, அறிந்த உண்மைகளை வெளியிட்டார்—அவை உலகு உள்ளளவும் மாற்றப்பட முடியாதன, என்று அல்ல ! ஆனால், அந்தக் கொள்கைகளை ஏற்று, அவைகளின் படி.அரசியல், பொருளியல், மத இயல் அமைப்புகளை ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளில் ஏற்படுத்திக் கொண்ட னர் - பழக்கத்தில் வந்துவிட்டது - அதனால், அது இறுகியும் விட்டது, மனிதனுடைய சிந்தனாசக்தியை, அரிஸ்டாடிலின் தத்துவங்களுடன் பிணைத்துவிட்டனர் ; அதற்கு மேலால் செல்வதோ, முரணாகச் சொல்வதோ, கேடுபயக்கும். என்றனர்; செல்பவர் தண்டனைக்கு உள்ளாவர் என்றும் சில இடங்களில் சட்டம் இயற்றினர். விண்ணிலே சிறகடித்துச் செல்லும் பறவை. எங்கும் சென்று, இன்புறும். கட்டிவிடப்பட்ட 'பட்டம்', நூலும் அதைச் செலுத்து வோனின் திறமும் அனுமதிக்கும் அளவுதான் செல்லும். அரிஸ்ட்டாடில் தந்த கருத்துத்தான், முடிந்த முடிவு. என்று ஐரோப்பா கூறிற்று. அவர், விண், மண், கடல். என்பவை குறித்துக் கூறிவைத்த கருத்துக்களை ஆராய்வதும் ஆபத்தானது. என்று கருதப்பட்டது.