பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 எ நாட்கல், பிரச்னையை அல்ல, எடுத்துரைத்தது. அவர் இப்படிச் சில அதிபர்களே தேவைதானா: அவர்கள் நடாத்திவைக்கும் தொழுகைகள், சடங்குகள் ஆகியவைகளால் மக்களின் ஒழுக்கம் மேம்படவும், மனம் தூய்மை பெறவும், செயல் சீர்படவும், மார்க்கமுண்டா என்ற அடிப்படையை அலச ஆரம்பித்தார்; மற்றவர்கள், கட்டிடத்துக்கு என்ன - வண்ணச் கண்ணம் பூசினால், கவர்ச்சிகரமாக இருக்கும் என்ற ஆய்வுரையில் களித்தனர். ப்ரூனோ, அந்தக் கட்டிடம், உனக்கும், உள்ளத்துக்கும், சிறைக்கூடம் ஆகிவிடக் கூடாதே என்று எச்சரிக்கை கூ கூறினார். மத ஏடுகளிலே காணப்படும் மாண்புகளின்படி, மத அதிபர்கள் நடந்துகொள்கிறார்களா, என்பதை அதர், கால்வின், போன்றார், ஆராய்ந்தனர்; ப்ரூனோ மத ஏடு களிலே மாண்புகள் என்று கருதப்படுவன, உண்மையி லேயே மாண்புகள் தானா என்று ஆராய்ந்தார் ! அந்த. மட்டோடு நிற்கவில்லை, புத்தறிவு தரும் புது உண்மை களுக்கும், மத ஏடுகளில் காணப்படும் கருத்துகளுக்கும். உள்ள முரண்பாட்டை, எடுத்துக்காட்டினார். ஆன்ஸ்லம் பாதிரியார், ப்ரூனோவை, மடாலயத்தில் இருந்தபோதே இதற்காகத்தான் எச்சரிக்கை செய்து வைத்தார். அவர், மடாலயக் கொள்கையில் ஊறிப் போனவர். எனினும், புத்திக்கூர்மையும் நற்பண்பும் உள்ள ப்ரூனோவிடம் மட்டற்ற ஆசைகொண்டவர். என்னே தான், எச்சரித்தார். ஐரோப்பா முழுவதும் அந்த நாட்களில் அரிஸ்டாடில் தந்த கொள்கைகள் ஆட்சிபுரிந்து வந்தன- எல்லாத் துறை களிலும் - சிறப்பாக மார்க்கத்துறையில்.