பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 எட்டு நாட்கள் களை நம்பி வாழ்வோர். பொறுத்துக்கொள்ள முடியும்? பகை மூண்டது, ப்ரூனோ அஞ்சவில்லை. சுவிட்சர்லந்து விரட்டினால், பிரான்சு; அங்கு எதிர்ப்பு வெப்பமானால், இங்கிலாந்து ; அங்கும் பகை மூண்டால் ஜெர்மனி. இவ்வண்ணம், ஓடியவண்ணம் இருந்தார். எந்த இடம் தங்குமிடம் ஆனபோதிலும், கோபர்னிகஸ் கொள்கையை வலியுறுத்துவார். இங்கிலாந்து நாட்டிலே ப்ரூனோ தங்கி இருந்தபோது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், அறிவுவளர்ச்சி விழா நடைபெற்றது : பல்வேறு நாட்டு அறிஞர்கள் கலந்து கொண்டனர்; ப்ரூனோ, அங்கு கோபர்னிகஸ் கொள்கையை வாதாடினார்; குதூகலம் கொதிப்பாக மாறிவிட்டது - சுட்டிக் காட்டிச் சுடுசொல் கூறலாயினர் மக்கள். போகிறான் பார் நாத்திகன் !" "உலகம் சுற்றுகிறது என்கிறான் இந்த உலுத்தன்' சூரியன் சுற்றாதாம் மேதாவி கூறுகிறான்" என்று ஏளனம் செய்வர் - மிரட்டுவர். இங்கிலாந்திலும் வெப்பம் அதிகமாகிவிட்டது. ஜெர்மெனியிலிருந்த விர்ட்டன்பர்க் பல்கலைக் கழகத் தில், ப்ரூனோவுக்கு நிம்மதி அளிக்கும் வாழ்வு கிடைத்தது தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார் அவருடைய கொள்கைக்காக வெறுத்து விரட்டவில்லை : அவர் கண்ட ஆராய்ச்சி உண்மையை அவர் எடுத்துரைக்கட்டும். அது அவர் உரிமை. என்று பெருந்தன்மையுடனும், தாராளத்